நல்லவன் என்று பெயர் எடுக்கும் நாள்: மனதிற்கு நல்லவனாக இருக்க வேண்டும்!

48

நல்லவன் என்று பெயர் எடுக்கும் நாள்: மனதிற்கு நல்லவனாக இருக்க வேண்டும்!

நவம்பர் 21 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (21-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: சாதிக்க கூடிய எண்ணம் வரும். வேலைக்கு முயற்சிக்கலாம். உடல் நலனில் அக்கறை தேவை. பிற்பகல் நேரம் குடும்பத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். திருமண விசயங்கள் கூடி வரும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்: மாற்றங்கள் நிறைந்த நாள். குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். சுபகாரிய செய்தி கூடி வரும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். பிஸினஸில் முன்னேற்றம் உண்டு. கல்வியில் தடுமாற்றங்கள் உண்டு. நெருங்கிய உறவுகளை சந்திப்பீர்கள். செல்வ செழிப்பு உண்டாகும். கண் திருஷ்டி இருக்கும்.

மிதுனம்: சொந்த ஊருக்கு செல்வீர்கள். குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். சாப்பாட்டு விசயத்தில் எச்சரிக்கை தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். வியாபாரிகளுக்கு கடனுதவி கிடைக்கும். சுபமான ஒரு நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்: மன தைரியம் அதிகரிக்கும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வெளிநாட்டு வாய்ப்பு வரும். கொடுத்த பணம் திரும்ப வரும் யோகம் உண்டு. தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. குடியிருப்பு வீடுகளில் பழுது ஏற்படலாம். பரம்பரை தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.

சிம்மம்: தன வருமானம் கூடும். உறவுகளால் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். சங்கரன்கோயில் கோமதி அம்மனை வழிபட வேண்டும். கல்யாண தடைகள் நீங்கும். வேலையிலுள்ள பிரச்சனைகள் நீங்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

கன்னி: உண்மையானதை மட்டும் செய்ய வேண்டும். தப்பான காரியத்தை செய்யக் கூடாது. கோபம் கூடாது. நெருக்கடி இருக்கும். பிற்பகலுக்குப் பிறகு நல்ல வருமானம் வரும். பதவி உயர்வுக்கு கூட பரிசோதனை நடக்கும்.

துலாம்: ஆகச்சிறந்த நாள். 2ஆவது திருமணம் குறித்து நல்ல செய்தி வரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சரியான விசா கிடைக்கும். வியாபாரத்தில் அரசு வழி உதவிகள் கிடைக்கும். யோகமான நாள். இறைவனின் அருள் கிடைக்கும். தொட்டது துலங்கும் அற்புதமான நாள்.

விருச்சிகம்: அரசு வேலை கிடைக்கும். கல்யாண விசயங்கள் கை கூடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் வரும். படிப்பில் வளர்ச்சி உண்டு. கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

தனுசு: நல்லவன் என்று பெயர் எடுப்பீர்கள். நல்ல வேலை கிடைக்கும். வெளியிடங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனதிற்கு நீ நல்லவனாக இருக்க வேண்டும். மருத்துவ செலவு வரலாம். பிள்ளையாரை வழிபட வேண்டும். வேலை மாற்றம் உண்டு.

மகரம்: கல்யாண விசயங்கள் கூடி வரும். உடல் நலனில் அக்கறை தேவை. வேலை வாய்ப்பு கிடைக்கும். பிஸினஸ் லாபம் உண்டு.

கும்பம்: பிற்பகல் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ள கூடாது. வருமானம் உயரும். பிள்ளைகளின் முன்னேற்றம் நன்றாக இருக்கும்.

மீனம்: காலைப் பொழுது நன்றாக இருக்கும். பிற்பகலில் மௌனமாக இருக்க வேண்டும். இனிய வார்த்தைகளை பேச வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை.