நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும்!

57

நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும்!

டிசம்பர் மாதம் 04 ஆம் தேதியான இன்றைய (04-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (டிசம்பர் 04 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கி செல்ல வேண்டும். பெண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்.

ரிஷபம்: வெற்றிகள் வந்து சேரும். உடல் நலனில் அக்கறை வேண்டும். அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. தன லாபம் அதிகரிக்கும். திருவண்ணாமலை இறைவனின் அனுக்கிரகம் கிடைக்கும்.

மிதுனம்: நல்ல வேலை வாய்ப்பு உண்டாகும். முருகப் பெருமானின் வழிபாடு, அருணாச்சலேஸ்வரரின் வழிபாடு வெற்றிகளை குவிக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மனம் கொண்டாட்டங்களில் ஈடுபடும். மனக்கஷ்டங்கள் நீங்க குல தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.

கடகம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். கால் பகுதிகளில் சுளுக்கு வரலாம். வம்பு, வழக்குகளில் இருந்து ஒதுங்கி செல்ல வேண்டும். பழககூடியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு இந்த நாள் உத்திரவாதம் தரும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மன தைரியம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். கடல் கடந்த பயணங்கள் வெற்றியைத் தரும். நண்பர்களால் நல்ல செய்தி வந்து சேரும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

துலாம்: மகிழ்ச்சிக்குரிய நாள். கண்களில் பிரச்சனை வரலாம். நரம்பி பிரச்சனை கூட ஏற்படும். பெண்கள் சுய பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும். நண்பர்களால் நல்ல செய்தி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்ப பிரச்சனை தீரும்.

விருச்சிகம்: காரியங்களில் வேகமும், படபடப்பும் இருக்கும். உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மின் சாதனங்களில் கவனம் வேண்டும். தன லாபம் பெருகும்.

தனுசு: நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த தொல்லைகள் தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

மகரம்: நிறைய லாபங்கள் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி தேடி வரும். திருமண முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். தன லாபம் உண்டு. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: நண்பர்கள் வழியில் நல்ல செய்தி வரும். முயற்சிகள் வெற்றி பெறும். சகோதர உதவிகள் கிடைக்கும். நல்ல தன லாபமும், மன நிம்மதியும் உண்டு.

மீனம்: தந்தையாரது உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். எதிரிகள் தொல்லை இருக்கும். எச்சரிக்கை தேவை. பணிந்திருந்து வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.