நாகம் வைத்திருக்கும் அம்மனை வழிபட நன்மை உண்டு!

84

நாகம் வைத்திருக்கும் அம்மனை வழிபட நன்மை உண்டு!

அக்டோபர் மாதம் 9 ஆம் தேதியான இன்றைய (09-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 09 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இனிய நாள். சந்தோஷமான நாள். தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வண்டி, வாகன பயணங்களில் கவனமாக செல்ல வேண்டும். தல லாபம், குடும்ப நிம்மதி உண்டு.

கும்பம்: கவனமாக இருக்க வேண்டிய நாள். அலட்சியமாக பேசக் கூடாது. உங்களைப் பற்றிய விமர்சனம் உண்டு. கனிவான பேச்சு தேவை. உடல் நலனில் அக்கறை வேண்டும். புதிய வேலை வாய்ப்பு அமையும்.

மகரம்: அன்னை துர்க்கையை வழிபட வேண்டும். வெற்றி உண்டாகும். துன்பங்கள் விலகும். வியாபாரிகளுக்கு இனிய நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தொண்டைப் பகுதியில் பிரச்சனை வரும் நிவர்த்தியாகும்.

தனுசு: வாழ்க்கையில் வெற்றிகரமான நாள். வியாபாரம், குடும்பம் என்று அனைத்திலும் வெற்றி. மற்றவர்களுக்கு கருத்து சொல்லக் கூடாது. யாருக்கும் போட்டியாக இருக்க கூடாது. அனுகூலமான நாள். கவனமாக இருந்தால் வெற்றி உண்டு.

விருச்சிகம்: சாதிக்க கூடிய நாள். குடும்ப கஷ்டங்கள் முடிவுக்கு வரும். கல்வி முயற்சிகள் வெற்றி பெறும். அலைச்சல்கள் அதிகம் இருக்கும். தொட்டது எல்லாம் வெற்றி. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

துலாம்: சந்தோஷமான நாள். ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தன லாபம் உண்டு. குடும்பத்தில் குதூகலம் உண்டு. நாகம் வைத்திருக்கும் அம்மனை வழிபட வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: ஒரு நல்லதொரு நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் சோதனைகள் வரலாம். தன லாபம் உண்டு.

சிம்மம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். தன லாபம், குடும்ப மகிழ்ச்சி, வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. சகல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

கடகம்: அற்புதமான நாள். சகல காரியங்களிலும் வெற்றி உண்டு. லாபம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் வெற்றி உண்டு. அடிமை இல்லை என்பதை நிரூபிப்பீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு.

மிதுனம்: மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பணவரவு அதிகரிக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும் ஒரு அற்புதமான நாள். உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். தன வரவு உண்டு. சகல் காரியங்களிலும் வெற்றிகள் உண்டு.

ரிஷபம்: எதிர்பாராத அதிர்ஷ்டகரமான செய்திகள் தேடி வரும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் நாள். கல்வியிலேயே முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் நண்பர் ஒருவர் மூலமாக முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கைகளில் அடிபட வாய்ப்பிருக்கிறது. சுப காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு. தன லாபம் உண்டு. உடல் நலனில் கவனம் தேவை.

மேஷம்: அற்புதமான நாள். தனம், கல்வி, குடும்ப மகிழ்ச்சி என்று அனைத்தும் பெருகும் ஒரு நல்ல நாள். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.