நீங்கள் சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்; காம எண்ணங்கள் அதிகமாகவே இருக்கும்!

20

நீங்கள் சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்; காம எண்ணங்கள் அதிகமாகவே இருக்கும்!

ஆகஸ்ட் 06 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (06-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அருமையான நாள். முதலீடு அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். யோகிகள், சித்தர்கள், ஞானிகளை வழிபட வேண்டும். குழந்தையானந்த சுவாமிகளை வழிபட வேண்டும். 12 மஞ்சள் நிற பூக்களை ராகவேந்திரர் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும். கொடுக்கல், வாங்கலில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்: காம எண்ணங்கள் அதிகமாக இருக்கும். தாம்பத்திய குறைபாடு இருக்கும். குருமார்களை வழிபட தாம்பத்திய குறைபாடு நீங்கும். தெய்வங்களுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் இந்த குறைபாடு நீங்கும். மன மகிழ்ச்சிகரமான ஒரு நாள்.

மிதுனம்: அருமையான வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் நெருக்கடிகள் இருக்கும். பொறுமையாக செல்ல வேண்டும். வருமானம் வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் அனுசரித்து செல்ல வேண்டும். பற்கள் தொடர்பான பிரச்சனை இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

கடகம்: அற்புதமான நாள். மனக்குறைகள் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளலாம். பிஸினஸ் முயற்சிக்கு ஏற்ற நாள்.

சிம்மம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய நாள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தத்து குழந்தைகளுக்கு ஏற்ற நாள். மனதில் உள்ள குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

கன்னி: மனதில் சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். நினைத்த காரியம் நிறைவேறும். விநாயகர் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: வேலை பார்க்கும் இடங்களில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆறுதலான ஒரு நாள்.

விருச்சிகம்: ரொம்ப நல்ல நாள். வெற்றிகள் வந்து சேரும். நல்ல பதவிகள் கிடைக்கும். படித்த படிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாம்பத்திய குறைபாடு நீங்கும். திருச்செந்தூர் முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும்.

தனுசு: கல்வி முயற்சிகள் வெற்றி பெறும். வீடு கட்டுவதற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தாயாரது உடல் நல பிரச்சனை தீரும். வாகனங்களை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும். வியாபாரத்தில் நல்ல செய்தி வந்து சேரும்.

மகரம்: காலம், நேரம் பார்த்து செயல்பட வேண்டும். வீடு, மனை வாங்க வேண்டும் என்று ஆசை வரும். சகோதர உறவுகள் நெருக்கடி தருவார்கள். அன்பு தான் காயங்களுக்கு மருந்தாக இருக்கும்.

கும்பம்: வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். காசு, பணம் சேரும். புரளிகளை நம்பக் கூடாது. வதந்திகளை நம்பி வாழ்க்கையை இழந்தவர்கள் பல பேர். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இடம் மாறுவார்கள். அல்லது அவர்களது வீடு இடிக்கும் நிலை வரலாம். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்: தோல் பிரச்சனை வரலாம். ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நெருக்கடிகள் இருக்கும். சித்தருக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். மல்லிகைப் பூ மாலை சாற்றி சித்தரை வழிபட வேண்டும்.