நீங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் நாள் இன்று!

55

நீங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் நாள் இன்று!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 26 ஆம் தேதியான இன்றைய (26-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். எண்ணிய எண்ணங்கள் வெற்றி தரும். வியாராத்தின் ரகசியம் அறிந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்: இனிய நாள். வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். எதிரிகளால் தொந்தரவு உண்டு. தாயாரது உடல் நலனில் அக்கறை வேண்டும். செலவை கட்டுப்படுத்த வேண்டும்.

மிதுனம்: கஷ்டங்கள் விலகும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். துர்க்கையை வழிபட வேண்டும். பதவி உயர்வு தேடி வரும். வரவுகள் உயரும். உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும்.

கடகம்: முன்னேற்றமான நாள். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற ஆசை வரும். உடல் நலனில் அக்கறை வேண்டும். தன வரவு உயரும்.

சிம்மம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். பிள்ளைகளால் நன்மை உண்டு. உடல் நல பிரச்சனை இருக்கலாம். கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் இருக்கும்.

கன்னி: வெற்றிகரமான நாள். மாற்றங்களுக்கு வித்திடும் நாள். குல தெய்வ ஆசிர்வாதம் கிடைக்கும். இடமாற்றம் தொழில் மாற்றம் உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: தாயாரது மீது அன்பு அதிகரிக்கும். உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சி வெற்றி தரும்.

விருச்சிகம்: வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வியாபாரிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தன வரவு கூடும்.

தனுசு: நல்ல நாள். தவறுகளை புரிந்து கொண்டு திருத்திக் கொள்வீர்கள். வரவும், செலவும் கூடும். கணவன் – மனைவி ஒற்றுமை பலப்படும்.

மகரம்: புதிய வியாபார ஒப்பந்தங்கள் தேடி வரும். மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சந்தோஷமான அனுபவங்கள் உண்டு.

கும்பம்: யாரையும் விமர்சிக்க கூடாது. தன வரவு உயரும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

மீனம்: யாரிடமும் கோபம் கூடாது. பயணங்களில் பாதுகாப்பு தேவை. வியாபாரம் வெற்றி கொடுக்கும்.