நீங்கள் போடுவது தான் சட்டம், தீட்டுவது தான் திட்டம்: சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

150

நீங்கள் போடுவது தான் சட்டம், தீட்டுவது தான் திட்டம்: சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் நவம்பர் 13 ஆம் தேதி மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் சிம்மம் ராசி – வீடியோ தொகுப்பு!

சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

அமோகமான குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நடக்க இருக்கிறது. மிகச்சிறப்பான குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் நடைபெற போகிறது என்று ஒரு பட்டியல் எடுத்தால் அதில் சிம்மம் ராசியும் இடம் பெறுகிறது. சிம்ம்ம் ராசிக்கார்ர்களுக்கு வாழ்க்கையில் மிகச்சிறந்த புகழையும், சந்தோஷத்தையும் இந்த குரு பெயர்ச்சி தர இருக்கிறது.

கடந்த காலங்களில் பல பிரச்சனைகள் இருந்தது. இதுவரை 6ஆம் இடத்தில் சனி பகவானுடன் குரு பகவான் அமர்ந்திருந்தார். 4ஆம் இடத்தில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார். இப்பொழுது தான் குரு பகவான் 7 ஆம் இடத்திற்கு செல்ல இருக்கிறார். அந்த 7ஆம் இடத்திலிருந்து உங்களை பார்க்கப் போகிறார். கடந்த காலங்களில் மகம், பூரம் நட்சத்திரக்காரர்கள் பலரும் காணாமல் போயிருந்தனர். சிம்ம ராசிக்காரர்கள் அவ்வளவு கஷ்டங்களையும் அனுபவித்திருந்தனர். 4ஆம் இடத்தில் கேது பகவான் இருந்த தால் தாய்க்கு பாதிப்பு வந்தது. https://www.youtube.com/watch?v=f5KFREmBipY&t=1s

சிம்ம ராசிக்காரர்களின் தாய்க்கு பாதிப்பு, சொத்துக்கு பாதிப்பு என்று ஏற்பட்டது. தொழில் செய்வதற்கு சரியான இடம் கிடைக்கவில்லை. வீடு கட்டும் பணி இழுத்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் முடிந்தபாடில்லை. வேலை பார்க்கும் இடத்தில் பல சிக்கல்களை சந்தித்து இருந்திருப்போம். குரு பகவான் 7ஆம் இட த்திலிருந்து உங்களை பார்ப்பதனால், சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான ஒரு காலகட்டம் ஆரம்பித்துவிட்டது.

எப்படிப்பட்ட வறுமையில் இருந்தாலும் வாழ்க்கையில் நாம் உயர்ந்துவிடுவோம். இனி உங்களது வாழ்க்கையின் அந்தஸ்தை திடீரென்று உயர்த்தப் போகிறது. வானத்தைக் கூட தொடும் அளவிற்கு உங்களது முன்னேற்றம், உயர்வு, அந்தஸ்து இருக்கப் போகிறது. உடல் நலப் பிரச்சனைகள் எல்லாம் மறையப் போகிறது. சமூகத்தில் தலை குனிய வேண்டிய சூழல் இருந்தது. அதெல்லாம் இப்பொழுது மாறி, சமுதாயத்தில் பலரும் மதிக்கக்கூடிய சூழல் இந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு அமையப் போகிறது.

சிம்ம ராசிக்காரர்கள் போடுவது தான் சட்டம். தீட்டுவது தான் திட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் செய்யக் கூடிய தொழில் முயற்சி வெற்றி பெறும். உயர்ந்த வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்வார்கள். கட்டிய மனைவி, கணவன், உங்களது பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால், வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானைச் சேரும் என்று பாட்டு பாடுவீர்கள். முக்கியமாக ராகவேந்திரரை வழிபாடு செய்ய வேண்டும். https://www.youtube.com/watch?v=f5KFREmBipY&t=1s