நீதிபதிகள் தெய்வங்களாக இருந்து உதவுவார்கள்: தனுசு ராசி செப்டம்பர் மாத பலன்!

28

நீதிபதிகள் தெய்வங்களாக இருந்து உதவுவார்கள்: தனுசு ராசி செப்டம்பர் மாத பலன்!

செப்டம்பர் மாத ராசி பலன் 2021….

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் தனுசு ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்…

தனுசு ராசி அன்பர்களே…

பல மாற்றங்கள் நிகழக் கூடிய ஒரு சூழல் இருக்கிறது. பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்க கூடிய காலகட்டம். தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான நேரம். வரும் 17ஆம் தேதி தர்ம கர்மாதிபதி யோகம் அடையப்போகிறீர்கள். தர்ம காரியங்கள் செய்வதற்கு ஏற்ற சூழல். வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவதற்கும் ஏற்ற மாதம் இது. உங்கள் மீது சொத்து எழுதி வைக்கும் காலம். குடும்பத்து பிரச்சனை முடிவுக்கு வர பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற காலகட்டம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் தனுசு ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021!

கோபப் பட்டு எதிர்மறை பேச்சுக்கள் பேசக் கூடாது. எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். யாரேனும் உங்களை திட்டினாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்களது வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறை பேச்சு உங்களுக்கே ஆபத்தாக முடியும். இந்த காலகட்டத்தில் பேச்சில் மட்டும் கவனமாக இருந்தால் வெற்றி பெறுவீர்கள்.

நேற்று வரை நல்ல வேலை அமையவில்லை என்று வருத்தப்படும் அன்பர்களுக்கு அருமையான வேலை அமையும் யோகம் வருகிறது. முன்னோர் வழி பிரச்சனை இருப்பவர்களுக்கு பல விஷயங்களில் தெளிவு வரும். அரசு வழி ஆதரவு கிட்டும். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு நீதிமன்றங்கள் நல்வழி காட்டும். நீதிபதிகள் தெய்வங்களாக இருந்து உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் பக்கத்து நியாயத்தை நீதி நிலைநாட்டும்.

சட்ட சிக்கலில், செய்யாத தவறுகளில் சிக்கியவர்கள் தற்போது தப்பித்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். கொடுக்கல், வாங்களில் சிக்கல் ஏற்படும். பணம், தனிமனித வாழ்க்கை, வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் பிரச்சனை என்று அனைத்து இடங்களிலும் இருக்கும் சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

தந்தையார் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இப்பொழுது நீங்கும். வேலை மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு வேலை மாற்றம் குறித்து நல்ல தகவல் வந்து சேரும். பெண் துணை உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரி பெண்ணாக இருந்தால் நன்மை நடக்கும். மூத்த சகோதரியால் நன்மை உண்டாகும். மனைவியால் நல்லது நடக்கும். வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்க கூடிய காலகட்டமாக இந்த மாதம் இருக்கும்.

https://www.youtube.com/watch?v=QznbZRAzewE