நேர்காணலுக்கு சென்றால் வெற்றி கிடைக்கும்!

42

நேர்காணலுக்கு சென்றால் வெற்றி கிடைக்கும்!

செப்டம்பர் 07 ஆம் தேதியான இன்றைய (07-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 07 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: அதிர்ஷ்டம் தரும் நல்லதொரு நாள். தொழிலில் வெற்றி. எதிர்பார்க்கும் இடத்தில் கடனுதவி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு அமையும். மனைவியின் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பயணங்கள் வெற்றி தரும். மனதில் மகிழ்ச்சி நிலவும். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மகரம்: நிதானம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது. மனக்குழப்பம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. தந்தை வழி உறவினர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனுசு: இந்த நாள் பாக்கியமான நாள். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டு. அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளால் நன்மைகள் உண்டு. வியாபாரிகள் வலம் பெறும் நாள். புதிய வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்: நல்ல வேலை வாய்ப்பு உருவாகும். நிலையான வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். கலை தொடர்பான விஷயங்கள் பிரபலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்: அருமையான நாள். வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் உருவாகும். தன வரவு பெருகும். சுப காரியங்கள் கூடி வரும். கெட்டி மேளம் முழங்க கூடிய நேரம். குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபாரிகள் நிறைய முதலீடு செய்வீர்கள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தேவைகள் பூர்த்தியாகும், மகிழ்ச்சியான நாள். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண்களுக்கு திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்றைக்கு செய்யலாம், வெற்றி உண்டாகும். அலுவலகத்தில் உள்ள தொந்தரவுகள் இன்றைக்கு விலக உயரதிகாரிகளை சந்தித்து பேசலாம்.

சிம்மம்: எடுத்த முயற்சிகளில் எல்லாம் வெற்றி கிட்டும் அற்புதமான நாள். கோபத்தை தவிர்த்தால் மிகச்சிறந்த வெற்றியை பெற முடியும். நல்ல தனலாபம் இன்றைக்கு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

கடகம்: நேர்காணலுக்கு சென்றால் வெற்றி கிட்டும். தன வருமானம் கூடும். தலையில் அரிப்பு, தோல் தொடர்பான நோய்கள் வரும். பொழுது போக்கு காரியங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். விபரீத விளையாட்டுகளில் ஈடுபட கூடாது.

மிதுனம்: கடும் சொற்களை பேசிவிடக் கூடாது. நெல்லை கொட்டினால் அள்ளிவிடலாம். சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது. கனிவாக பேச வேண்டிய நாள். தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சுப காரியங்கள் கூடி வரும். வியாபாரிகளுக்கு வசந்தமான நாள்.

ரிஷபம்: பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மகாலட்சுமியை வழிபட திறைகள் வெளிப்பட்டு வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு வசந்தமான நாள்.

மேஷம்: பணியாற்றும் இடத்தில் கோபம் வெளிப்படும் நாள். கோபத்தை கவனமாக கையாள வேண்டிய நாள். சுப காரியங்கள் கூடி வரும் நாள். வியாபாரிகள் போட்டி, பந்தயங்களை அருமையாக சமாளிப்பீர்கள்.

https://www.youtube.com/watch?v=C4bFDpwNCOc