பச்சை நிற ஆடை அணிந்தால் துரதிர்ஷ்டம் உண்டாகும்!
லால் என்பதற்கு சிவப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் அர்த்தம். இது ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரங்களைப் பற்றிய குறிப்பு. பொதுவாக ஒருவர் பிறக்கும் போதே அவரது தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டுவிடும்.
ஜோதிடத்தின் படி, கிரக நிலைகளின் அடிப்படையில், ஜாதகக்காரருக்கு கிரக தோஷங்கள் பாதிப்பு அமையும். ஆனால், குறிப்பிட்ட வயது வரை அந்த ஜாதகக்காரருக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, அவரது அப்பா அல்லது அம்மா ஆகியோரில் யாரேனும் ஒருவரைத் தான் அந்த ஜாதகம் பாதிக்கும்.
அதன்படி, ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது இந்த லால் கிதாப் பரிகாரம். இன்றும் இந்த லால் கிதாப் பரிகாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். 12 ராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். அதன் படி, தற்போது மிதுன ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
மிதுன ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:
- மீனுக்கு பொரி அல்லது இரை போடுவது நல்லது.
- படிகாரத்தூள் சேர்த்த பல்பொடி கொண்டு பல் துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
- புனித யாத்தை ஸ்தலங்களுக்கு அரிசி தானமாக கொடுக்கலாம்.
- பண வசதிக்கேற்ப வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம்.
- 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒவ்வொரு புதன்கிழமை தோறும் வணங்கி ஆசி பெறுவது நல்லது.
- பச்சை நிற ஆடைகள் அணிந்தால் துரதிர்ஷ்டம் உண்டாகும்.
- ஒரு பச்சை நிற பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்தப் பாட்டிலை ஒரு வயலில் நெருப்பு வைத்து அந்தப் பாட்டிலை எரித்தால் துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.