பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை!

78

பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை!

அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியான இன்றைய (08-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 08 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷமான அனுபவங்கள் நிறைந்த நாள். வியாபாரிகள், மாணவர்களுக்கு மிகச்சிறந்த நாள். தன லாபம் உண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

கும்பம்: நன்மைகள் ஏராளமாக நடைபெறும் நல்லதொரு நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். சுப காரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் அளவான நன்மை உண்டு. உடல் நலனில் அக்கறை வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்: எதிர்பார்க்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனை விலகும். வியாபாரத்தில் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். பல் இடுக்குகளில் பிரச்சனை வரலாம். தன லாபம் பெருகும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

தனுசு: ஒரு நல்ல நாள். மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும் நாள். வேலை வாய்ப்பு முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாகும். அனுகூலமான நாள். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்: மாற்றங்களை சந்திப்பீர்கள். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி உறவில் சந்தேகம் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு. சகல விஷயங்களும் சாதகமாக அமையும்.

துலாம்: இனிய நாள். நன்மைகள் அதிகம் நடைபெறும் நல்ல நாள். பதற்றம் இருக்கும். உடல் உபாதைகள் வரும். தன லாபம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: அருமையான நாள். தன லாபம் உண்டாகும். துன்பங்கள் நீங்கும். வேலை வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகள் சொல்லி வைத்து லாபம் சம்பாதிப்பீர்கள். விரல் நகங்களில் பிரச்சனை வரலாம். உடல் நலனில் பாதுகாப்பு தேவை. வரவுகள் பெருகும்.

சிம்மம்: மன மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் பெருகும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். கால பைரவர் அனுக்கிரகம் உண்டு. சிக்கல்கள் தீர்ந்து வாழ்க்கையில் உயர்வு ஏற்படும். இனிமையான செய்தி தேடி வரும்.

கடகம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். மனதில் மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாள் பிரச்சனை நிவர்த்தியாகும். வியாபாரிகளுக்கு புது வரவு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் சலசலப்பு வரலாம். அயல்நாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும்.

மிதுனம்: நிறைய சாதனை புரிவீர்கள். விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். வேலை வாய்ப்பு அமையும். நீண்ட நாள் கனவு நினவாகும். அளவான நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒரு நாள். ஏதோ கற்பனையில் இருந்து கொண்டே இருப்பீர்கள். குடும்ப பிரிவினைகள் நிவர்த்தியாகும். புதிதாக திருமணமானவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும். தொண்டை வலி ஏற்படலாம்.

மேஷம்: வேலை வாய்ப்பு உருவாகும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசு வேலைக்கு கூட முயற்சிக்கலாம். உடலில் வலி, சோர்வு உண்டாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வு தேவை.