பத்திரப்பதிவு, தாய் பத்திரத்தில் கவனம் வேண்டும்!

33

பத்திரப்பதிவு, தாய் பத்திரத்தில் கவனம் வேண்டும்!

அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியான இன்றைய (16-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 16 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: தன வரவு அதிகரிக்கும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். முன்னேற்றமான செய்திகள் வந்து சேரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்: எண்ணிய காரியங்கள் இனிதாக முடியும் நல்லதொரு நாள். பண வரவு உண்டு. பெரியவர்கள் தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். புதிதாக வீடு, மனை கட்டும் முயற்சியில் இருந்தால் பத்திரப் பதிவு, தாய் பத்திரம் ஆகியவற்றை சரிபார்த்து செய்ய வேண்டும். புதிய வரவுகள் உண்டு.

மகரம்: இனிய நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் ஒரு நல்ல நாள். பிறரது அந்தரங்கள் விஷயங்களில் தலையிடக் கூடாது. வரவுகள் உண்டு. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

தனுசு: நன்மைகள் ஏராளமாக நடைபெறும் ஒரு நல்ல நாள். உறவினர்களால் நன்மை உண்டு. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: இந்த நாள் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தொட்டது துலங்கும் நாள். பண வரவு பெருகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எண்ணிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.

துலாம்: இதமான நாள். முன்னேற்றத்திற்கான ஒரு நாள். குல தெய்வத்தின் ஆசிர்வாதம் உண்டு. பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு. வியாபாரம், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். செலவினங்கள் கூடும். வரவுகள் கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே நடக்கும். குல தெய்வ அனுக்கிரகம் உண்டு. குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். தன வரவு உண்டு. உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை.

சிம்மம்: மனமகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். நல்ல வாய்ப்புகள் வந்து குவியும். மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் நலனில் கவனம் வேண்டும்.

கடகம்: இனிய செய்திகள் தேடி வரும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். புதிதாக வாகனம் வாங்கும் யோகம் வரும். பிற்பகலில் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். நண்பர்களால் நன்மை உண்டு.

மிதுனம்: வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது. யாரையும் விமர்சிக்க கூடாது. பதற்றம் இருக்கும். அளவான நன்மை உண்டு. மிக மகிழ்ச்சியான நாள். உடல் நலனிலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: சளி தொல்லை இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. தன லாபம் வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மேஷம்: தொட்டது துலங்கும் நல்ல நாள். கல்வியில் முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் உண்டாகும். தோல் தொடர்பான பிரச்சனை வரும். குடும்ப உறுப்பினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. https://www.youtube.com/watch?v=77lWrV2_6u4