பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள கூடாது; பாவங்கள் தீர அன்னதானம் செய்யலாம்!

22

பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள கூடாது; பாவங்கள் தீர அன்னதானம் செய்யலாம்!

ஜூலை 07 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (07-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வேகமும் விவேகமும் இருக்கும். ஆயுதங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. இதுவும் கடந்து போகும். வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் கூடும். குடும்ப வாழ்க்கை இனிக்கும்.

ரிஷபம்: இனிய நாள். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். அன்னதானம் செய்தால் பாவங்கள் நீங்கும். தான, தர்மம் செய்ய வேண்டும். பதவிகள் தேடி வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

மிதுனம்: மிக அருமையான நாள். தன வருமானம் வரும். குடும்ப வாழ்க்கை இனிக்கும். மூச்சுபயிற்சி செய்ய வேண்டும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. செலவுகள் அதிகமாகும். இடமாற்றம் உண்டாகும்.

கடகம்: மிக அருமையான நாள். மன தைரியம் கூடும். வேலை வாய்ப்பு கூடும். கலைஞர்களுக்கு நல்ல நாள். மருத்துவர்களுக்கு ஏற்ற நாள். உடல் அசதி இருக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

சிம்மம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். வருமானம் வரும். உறவுகள் மலரும் ஒரு நாள். நல்ல தகவல் வரும். தொழில் விஷயங்கள் வெற்றி பெறும்.

கன்னி: மிக நல்ல நாள். புத்திசாலித்தனம் பெருகும். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: நண்பர்களால் பிரச்சனை வரலாம். வேலைமாற்றம் ஏற்படலாம். பொதுமக்கள் இருக்கும் துறையில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணைவர் உடல் நலனில் அக்கறை தேவை. வேலைவாய்ப்பு கிடைக்கும். பிஸினஸ் முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்: அருமையான நாள். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். நடப்பவை யாவும் நல்லதாக முடியும். மனக்கவலை இருக்கும். குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு சோதனைகள் வரலாம்.

தனுசு: மாமனார் உடல் நலனில் அக்கறை தேவை. பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொள்ள கூடாது. தன வருமானம் பெருகும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்: நல்ல நாள். மகிழ்ச்சிகரமான செய்தி வரும். உடல் நலனில் அக்கறை தேவை. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. சொத்து, சுகம் பிரச்சனை வரலாம். சகோதர உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

கும்பம்: இந்த நாள் முழுவதும் பொறுமையாக இருக்க வேண்டும். கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. உடல் நலிவு இருக்கும். சிறு தூர பயணங்களில் எச்சரிக்கை தேவை.

மீனம்: அதிர்ஷ்டகரமான நாள். வாழ்க்கைத் துணை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலக பிரச்சனை தீரும். வியாபார முன்னேற்றம் உண்டு.