பம்பர் லாட்டரி அடிக்கும் யோகம்: விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன் 2022!

140

பம்பர் லாட்டரி அடிக்கும் யோகம்: விருச்சிகம் புத்தாண்டு ராசி பலன் 2022!

பல சோதனைகளை தாண்டி ஒரு வழியாக இந்த 2021 ஆம் ஆண்டு முடியப் போகிறது. ஒவ்வொருவரும் நிம்மதி பெருமூச்சு விடக் கூடிய 2022 ஆம் ஆண்டு புத்தாண்டும் வரப்போகிறது. பிறக்கப் போகும் 2022 ஆம் ஆண்டு நல்ல வேலை வாய்ப்பை கொடுக்குமா? திருமண வரன் அமையுமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? சொத்து, சுகம் சேருமா? என்பது குறித்து ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்தனியாக பார்ப்போம். ஜோதிஷ கஜகேசரி டாக்டர் ஆச்சார்யா ஹரீஷ் ராமன் 12 ராசிகளுக்கான 2022 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசி பலன்களை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் இந்தப் பதிவில் விருச்சிகம் ராசிக்கான 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு ராசி பலனை பார்ப்போம்.

பிறக்கப் போகும் 2022 ஆம் ஆண்டில் முதலில் இந்த 4 கிரக சஞ்சாரத்தை வைத்துக் கொண்டு தான் இந்த ஆண்டின் பலன்களை பார்க்கிறோம். அதில் மிக முக்கியமான கிரகம் எதுவென்றால் ராகு கேது. வரும் ஏப்ரல் 13ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். அதே போன்று கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பயணம் செய்கிறார்.

கால புருஷ தத்துவப்படி லக்னம் 7க்கு உடைய ஸ்தானங்களில் ராகு, கேதுக்கள் அமரப் போவது, 14ஆம் தேதி ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு குரு பகவான் கும்ப ராசியிலிருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். தனது வீட்டிற்கு சென்று ஆட்சிப் பெற்ற நிலையில் குரு பகவான் அமரப் போகிறார். இதன் மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது. 29ஆம் தேதி ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் தேதி ஜூலை 2022 ஆம் ஆண்டு வரையில் சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சி அடைந்து 55 நாட்கள் அங்கிருந்து வக்கிரமடைந்து வக்கிர நிவர்த்தியடைந்து மீண்டும் மகர ராசிக்கு வருவார்.

மேலும் படிக்க: விருச்சிகம் ராசிக்கான 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

ஏழாம் இடத்திலிருந்து 6ஆம் இடத்திற்கு ராகு பெயர்ச்சி அடையப் போகிறது. அதே போன்று கேது உங்களுக்கு லக்னத்திலிருந்து 12 ஆம் இட த்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறது. 6,12 ஆம் இடங்கள் ருணம், ரோகம் மற்றும் சத்ரு எல்லாம் இரட்டை வேட நன்மைகள் போன்று நடக்கும். 6ஆம் இடத்திற்கு ராகு வந்தால் வெளிநாடு செல்வீர்கள். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

வீடு, வண்டி, வாகனம் என்று ஏதாவது வாங்குவீர்கள். இதற்காக கடனுதவியும் கிடைக்கும். கடின உழைப்பு அதிகளவில் இருக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மருத்துவ செலவு வரும். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். எதிரிகள் தொல்லை கண்டிப்பாக இருக்கும்.

உடல் நல பாதிப்பு ஏற்படும். வங்கி கடனுதவியும் கிடைக்கும். வீடு வாடகைக்கு விடலாம். ஹோட்டல் வியாபாரம் நன்றாக நடக்கும். கோர்ட், கேஸ், வம்பு வழக்குகள் என்று ஏதாவது இருந்தால் உங்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். மற்றவர்களின் நலனை விட உங்களது நலன் உங்களுக்கு ரொம்பவே முக்கியம் என்று இருப்பீர்கள்.

வேலை நிமித்தமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து இருக்கும் நிலை இருக்கும். யோக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். குரு பகவான் 4ஆம் இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு சென்று அமரப் போகிறது.

குரு பகவான் 5ஆவது ஸ்தானத்திற்கு வந்து அமரும் போது உலகத்தில் உங்களுக்கு பேரும், புகழும் கிடைக்கும். நல்ல விஷயங்கள் நடக்கும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் அமையும். பிறக்கும் குழந்தை விளையாட்டில் பெரிய ஆளாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. கோயில்களுக்கு சென்று வருவீர்கள். கும்பாபிஷேகம் செய்வீர்கள்.

கடன் பிரச்சனை தீரும். குழந்தைகளுக்காக நல்ல விஷயங்கள் செய்வீர்கள். பண மழை பொழியும். வெளிநாட்டிற்கு சென்று வருவீர்கள். சுப காரியங்கள் நடக்கும். சனி பகவான் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடையும் போது, வீடு, வண்டி, வாகனம், சொத்துக்கள் ஏற்படும். அரசு வேலை கிடைக்கும். அம்மா வழி உறவினர்களால் பிரச்சனைகள் வரலாம்.

தாயாரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணக்கூடிய அமைப்பு ஏற்படும். எல்லா நல்ல விஷயங்கள், சுப காரியங்கள் உங்களது வீட்டில் நடக்கும் அற்புதமான ஆண்டாக இந்த 2022 ஆம் ஆண்டு அமையப் போகிறது. சுபீட்சமான பலன் கொடுக்க பிள்ளையார்பட்டி விநாயகரை தரிசனம் செய்து விட்டு வர வேண்டும்.