பயணங்களில் வெற்றி உண்டாகும்; பண வரவு வரும்!

53

பயணங்களில் வெற்றி உண்டாகும்; பண வரவு வரும்!

செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (10-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: லாபமான வாழ்க்கை அமையும். தன வரவு உண்டாகும். பெற்றோருக்கிடையில் இருந்த சண்டை நீங்கும். பொருளாதாரத்தில் உயர்வு வரும். குடும்பத்தில் நல்ல சூழல் உண்டாகும்.

ரிஷபம்: வாய்வு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாய் வழி சொந்தங்களால் நன்மை உண்டாகும். சொத்து சுகம் சேரும்.

மிதுனம்: பாக்கியமான நாள். வாழ்க்கையில் நல்லதெல்லாம் நடக்கும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

கடகம்: யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. யார் மனதும் புண்படும்படி பேசக் கூடாது. புதிய காரியங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. தாயாரது உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

சிம்மம்: மிக மிக அருமையான நாள். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். ராகு திசை நடப்பவர்கள் கவனமாக இருக்கும். மின் சாதனங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரவுகள் பெருகும் நல்ல நாள்.

கன்னி: மனசு அலைமோதும். கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பைரவரை வழிபட வெற்றிகள் பெருகும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: சிறப்பானதொரு நாளாக இந்த நாள் அமையப் போகிறது. துர்க்கை வழிபாடு ஆனந்தத்தை தரும். திருமணத்தை அமைத்துக் கொடுக்கும். கோயிலுக்கு சந்தனம், சந்தனக்கல் வாங்கி கொடுத்தால் உடல் நல பிரச்சனை தீரும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: கல்வி முயற்சி வெற்றி பெறும். கடன் கிடைக்கும். தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

தனுசு: மன தைரியம் பெருகும். பயணங்களில் வெற்றி உண்டாகும். பண வரவும் வரும். எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

மகரம்: பண வரவு பற்றிய சிந்தனை இருக்கும். மாலையில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். அன்பு ஜெயிக்கும். மனித நேயம் முக்கியம். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். எல்லா வகையிலும் நல்ல நாள்.

கும்பம்: நெருக்கடி இருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடிய மனிதர்கள். பிஸினஸில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறவுகள் இனிக்கும். முயற்சிகள் பலிதமாகும்.

மீனம்: சிவபெருமான் வழிபாடு செய்ய வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். சொத்து, சுகம் வாங்க கூடிய யோகம் வெற்றி பெறும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.