பழைய நிறுவனத்திலிருந்து வேலைக்கு வாய்ப்பு வரும்!

44

பழைய நிறுவனத்திலிருந்து வேலைக்கு வாய்ப்பு வரும்!

மே 29 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (29-05-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: மிகச்சிறந்த வெற்றிகளை பெறும் அற்புதமான நாள். சுகமான வருமானம் வரும். அனுகூலமான நாள். தந்தை வழியில் காசு, பணம் வந்து சேரும். தன வரவு வரும். காலையில் நல்ல வருமானம் வரும். மனக்குழப்பங்கள் தீரும்.

ரிஷபம்: வெற்றிகள் வந்து சேரும் அருமையான நாள். நல்ல நோக்கங்கள் நிறைவேறும். குரு மங்மள யோகம் உண்டு. வாடிக்கையாளர் வருகை இருக்கும். சொத்து வகையில் நல்ல வருமானம் இருக்கும். உடல் நலனில் எச்சரிக்கை தேவை.

மிதுனம்: அனுகூலமான ஒரு நாள். தொழில் போட்டி இருக்கும். மூச்சுக்குழல் பிரச்சனை இருக்கும். விநாயகர் வழிபாடு செய்ய எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடகம்: அற்புதமான நாள். மக்கள் செல்வாக்கு உண்டாகும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சங்கங்களில் உறுப்பினராக சேர்வீர்கள். தொழில் முயற்சி வெற்றி பெறும்.

சிம்மம்: அழகான ஒரு நாள். நிலைத்த வெற்றிகள் உண்டு. தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பண விஷயங்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன்னி: யோசித்து செயல்பட வேண்டிய நாள். பேசும் வார்த்தையில் கவனம் வேண்டும். யாரையும் விமர்சிக்க கூடாது. முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: காதலை வெளிப்படுத்தக் கூடிய நாள். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். ரொம்ப நல்ல நாள். எதிரிகளை வெல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்: யோகமான நாள். குரு மங்கள யோகம் வேலை செய்யும். எழுத்தாளருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வெற்றிகள் குவியும். தொழில் முயற்சி வெற்றியடையும். விநாயகர் கோயிலில் வழிபாடு செய்ய வேண்டும்.

தனுசு: அதிர்ஷ்டமான நாள். நிறைய மாற்றங்கள் நடக்கும். பழைய நிறுவனத்திலிருந்து வேலைக்கு வாய்ப்பு வரும். பேரும், புகழும் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். மகிழ்ச்சியான நாள். அழகுபடுத்திக் கொள்ளும் எண்ணம் மேலோங்கும்.

மகரம்: இனிமையான நாள். ஆசை நிறைவேறும். காதலை வெளிப்படுத்துவீர்கள். எதிர்ப்புகள் மறையும். தோல் பிரச்சனை வரலாம். வியாபாரத்தில் நல்ல சூழ்நிலை உண்டு.

கும்பம்: அதிர்ஷ்டம் தேடி வரும். கூடுதல் வாய்ப்புகள் கூடி வரும். வளர்ச்சி கூடும். காதுக்கு அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்: அதிர்ஷ்டமான ஒரு நாள். தர்ம கர்மாதிபதி யோகம் உண்டாகும். நல்ல நல்ல வாய்ப்புகள் கூடி வரும். சகோதர உறவு நன்றாக இருக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.