பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும்!

77

பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும்!

லால் என்பதற்கு சிவப்பு என்றும், கிதாப் என்பதற்கு புத்தகம் என்றும் அர்த்தம். இது ஜோதிட சாஸ்திரம் மற்றும் கைரேகை சாஸ்திரங்களைப் பற்றிய குறிப்பு. பொதுவாக ஒருவர் பிறக்கும் போதே அவரது தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டுவிடும்.

ஜோதிடத்தின் படி, கிரக நிலைகளின் அடிப்படையில், ஜாதகக்காரருக்கு கிரக தோஷங்கள் பாதிப்பு அமையும். ஆனால், குறிப்பிட்ட வயது வரை அந்த ஜாதகக்காரருக்கு பாதிப்பு ஏற்படாது. மாறாக, அவரது அப்பா அல்லது அம்மா ஆகியோரில் யாரேனும் ஒருவரைத் தான் அந்த ஜாதகம் பாதிக்கும்.

அதன்படி, ஒருவர் பிறந்தபோதைய கிரக நிலைகளின் பாதிப்புகளுக்கு எளிய முறையில் பரிகாரம் தருகிறது இந்த லால் கிதாப் பரிகாரம். இன்றும் இந்த லால் கிதாப் பரிகாரத்தை பலரும் பின்பற்றி வருகின்றனர். 12 ராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம். அதன் படி, தற்போது தனுசு ராசிக்கான லால் கிதாப் பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

தனுசு ராசி லால் கிதாப் பரிகாரங்கள்:

  1. தந்தையின் ஆடைகள், உடைகள், படுக்கை ஆகியவை உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும்.
  2. பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல், உங்களால் இயன்றதைத் தர்மம் செய்ய வேண்டும்.
  3. வாரந்தோறும் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று கற்பூரம், நெய் அல்லது தயிர் என்று வாங்கிக் கொடுத்தால் நல்வாழ்வு தரும்.
  4. வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ செடி வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
  5. தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
  6. வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நன்மை உண்டாக்கும்.
  7. யாரையும் ஏமாற்றவும் கூடாது. பொய் சாட்சி கூறவும் கூடாது.
  8. அரசமர பிள்ளையாருக்கு பிரதட்சிணம், வழிபாடு செய்வது நன்மை தரும்.
  9. ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும், தனது தலைமுறையினரும் நல்வாழ்வு பெற வேண்டுக் கொள்ள அப்படியே நடக்கும் என்பது ஐதீகம்.