பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்!

160

பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்!

செப்டம்பர் 16 ஆம் தேதியான இன்றைய (16-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 16 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: நல்ல வேலை வாய்ப்பு அமையும். சுந்தந்திரமான எண்ணங்கள் பெருகக் கூடிய நாள். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த மனக் கசப்புகள் விலகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வண்டி, வாகனங்களை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும். சிறு பூச்சிகளால் தொந்தரவு உண்டு.

கும்பம்: மிகச்சிறந்த வெற்றிகள் நிறைந்த நாள். நன்மைகள் உண்டு. சகோதர உறவில் அக்கறை காட்ட வேண்டும். தன வரவு உண்டு. எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

மகரம்: நன்மைகள் ஏராளமான அளவில் நடக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் வளர்ப்பின் மூலமாக சந்தோஷம் பெருகும். பண விஷயத்தில் ஒரு நெருக்கடி இருக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனுசு: எண்ணிய காரியங்கள் எண்ணியபடியே வெற்றியடையும். வயதானவர்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடம் எல்லா காரியத்தையும் செய்வீர்கள். பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். மனசாட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: சந்தோஷமான அனுபவங்கள் பெருகும் நல்லதொரு நாள். நிம்மதி பெருகும் நாள். தன வரவு வரும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பிள்ளைகள் வளர்ப்பின் மூலமாக சந்தோஷம் பெருகும்.

துலாம்: வெற்றிகள் வந்து குவியும். மன தைரியம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரால் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண் தெய்வ வழிபாடு மிகுந்த நன்மைகளை குவிக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அனுகூலமான நாள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டாகும். காணாமல் போன பல விஷங்கள் இன்று திரும்ப கிடைக்கும். மனைவி ஆதரவாக இருப்பார். மகள் மூலமாக சந்தோஷம் வரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்: நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பேரம் பேசி சில பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும். தன வரவு அதிகரிக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்: கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அக்கம் பக்கத்தினரால் சில ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும். பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகும்.

மிதுனம்: அதிர்ஷ்டமான நாள். தாயின் ஆசீர்வாதம் கிடைக்கும். முயற்சி எடுத்தால் எல்லாமே வெற்றி. பிறருக்காக செய்யக் கூடிய காரியங்கள் வெற்றி தரும். உள்நாட்டு வியாபாரம் சிறப்படையும். அன்பு பிள்ளைகளால் மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

ரிஷபம்: முடிந்த வரை பயணங்களை தவிர்க்க வேண்டும். யாருடைய அந்தரங்க விஷயங்களில் தலையிட்டு ஆலோசனை சொல்லாமல் இருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.

மேஷம்: யோகமான நாள். ஓம் சந்திராய நமஹ என்ற மந்திரத்தை 1008 முறை சொன்னால், எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனசு சந்தோஷமாக இருக்கும். பித்ருக்களின் ஆசீர்வதாம் கிடைக்கும்.

https://www.youtube.com/watch?v=G6qF7VHtvwo