பித்ரு தோஷம் வெளிப்படும்: முன்னோர்களை வழிபட வேண்டும்!

54

பித்ரு தோஷம் வெளிப்படும்: முன்னோர்களை வழிபட வேண்டும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 22 ஆம் தேதியான இன்றைய (22-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். செய்தொழிலில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் வெற்றி உண்டு. தியானம் செய்ய வேண்டும். வரவுக்கு ஏற்ற செலவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு.

ரிஷபம்: அருமையான நாள். வீடு வாங்கு விற்பவர்களுக்கு லாபமான நாள். தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வண்டி, வாகனங்களை பழுது நீக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.

மிதுனம்: சந்தோஷமான நாள். எதிர்பார்க்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அனுகூலமான நாள். பேச்சுக்கு மதிப்பு உண்டு. தன வரவு உயரும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

கடகம்: தன வரவு உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். உடல் நலனில் அக்கறை தேவை. வாழ்க்கை பற்றிய கவலை இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனை தீர வழி பிறக்கும். வரவுகள் உயரும். செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்: மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட நிம்மதி உண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் ரகசியம் பற்றி புரிந்து கொள்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. வயிற்று வலி பிரச்சனை இருக்கும்.

கன்னி: மாற்றங்களுக்கான நல்ல நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உயர் பதவிகள் கிடைக்கும். போராட்ட குணம் வெளிப்படும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: அருமையான நாள். லாபமான வெற்றிகரமான நாள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தன வருமானம் பெருகும். உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும். வம்பு, வழக்குகளை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும் ஒரு நாள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு முன்னேற்றமான நாள். நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.

தனுசு: பல நன்மைகள் உண்டாகும். பித்ரு தோஷம் வெளிப்படும். பேச்சில் எதிர்மறை சிந்தனை மேலோங்கும். முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் மகிழ்ச்சியாக இருக்கும். கொஞ்சம் உடல் நலனிலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகரம்: பொறுமையாக செயல்பட வேண்டிய நாள். புதிய விஷயங்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் சின்ன பிரச்சனை இருந்தாலும் மருத்துவரது ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்: உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சகோதர வழியில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.

மீனம்: வியாபாரத்தில் வெற்றி உண்டு. குடும்ப வாழ்க்கை பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ள லாம். வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். வருமானம் உயரும்.