பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்: துலாம் நவம்பர் மாத ராசி பலன்!
நவம்பர் மாத ராசி பலன் துலாம் ராசி….
நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஆங்கில மாதமான நவம்பர் மாத ராசி பலன்கள் 2021…
துலாம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்…
பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். தந்தை வழி உறவு வழியில் ஏதோ ஒரு இழப்பு. அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு முதல் 15 நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தங்களது பெயர் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். பணியிட மாற்றம் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமும், சிலருக்கு விரும்பாத இடமும் கிடைக்கப் பெறும்.
மேலும் படிக்க: துலாம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன் 2021 – வீடியோ தொகுப்பு!
இதையும் கேளுங்கள்: துலாம் ராசி – குரு பெயர்ச்சி பலன்கள் 2021 – வீடியோ தொகுப்பு!
கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய புதிய படிப்புகளை தேர்வு செய்து படிப்பீர்கள். அதனால், முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு வெளிநாட்டு தொடர்பு விரிவடையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண வரன் கூடி வரும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேரக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமைகிறது.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரும். பல மாற்றங்கள் உண்டாகும். நாவடக்கம் மிகவும் அவசியம். குடும்பத்தில் வாக்கு, வாதங்கள் செய்யக் கூடாது. வண்டி, வாகனங்களில் இன்னும் கொஞ்சம் கவனமாக செல்ல வேண்டும். பெண்கள் தங்களது பாதுகாப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சமூக வலைதளத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மாதம் நடைபெற இருக்கும் குரு பெயர்ச்சி நல்ல பல மாற்றங்களை தரப் போகிறது. https://www.youtube.com/watch?v=WAo7_NyRndM&t=314s