பிறரது குற்றம் குறை சொல்லக் கூடாது!

30
இன்றைய ராசிபலன்

பிறரது குற்றம் குறை சொல்லக் கூடாது!

நவம்பர் 29 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (29-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வேல் அபிஷேகம் செய்ய நல்ல தாம்பத்திய வாழ்க்கை அமையும். வேல் மாறாடல் ஸ்லோகம் சொல்ல வெற்றிகள் குவியும். தன வரவு உண்டாகும். தொட்டது துலங்கும் அருமையான நாள்.

ரிஷபம்: கார்த்திகைச் செல்வனை வழிபட வேண்டும். முருகனுக்கு 9 தீபங்கள் ஏற்றி வழிபட தொட்டது துலங்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கை தேவை.

மிதுனம்: நல்ல நேரம். திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இதமாக பேச வேண்டும். புகழ், செல்வாக்கு, அந்தஸ்து கிடைக்கும். பழமுதிர்ச்சோலை முருகனை வழிபட வேண்டும். சஷ்டி நாதனை வழிபட வியாபார முன்னேற்றம் வரும்.

கடகம்: கர்ம வினைக்கேற்ப எல்லா பலன்களும் உண்டாகும். நல்ல காரியங்கள் செய்வீர்கள். பிறருக்கு உதவி செய்யக் கூடிய மனப்பான்மை பெருகும். வாழ்க்கையில் அன்பு பாராட்டுவீர்கள். வாழ்க்கையில் எல்லா உயர்வுகளும் தேடி வரும்.

சிம்மம்: இடமாறுதல் அமையும். புதியவர்கள் தேடி வருவார்கள். பழகியவர்களும் தேடி வருவார்கள். உடல் நலனில் அக்கறை தேவை. உள் மனதில் குழப்பம் இருக்கும். விநாயகரை வழிபட வேண்டும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கன்னி: எதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். காதலில் பின்னடைவு ஏற்படும். வேலையில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துலாம்: வெற்றிகள் நிறைந்த நாள். வசீகரத் தோற்றம் வரும். பெருமை, நற்புகழ், உண்டாகும். வியாபாரத்தில் பேச்சு திறமை வசியப்படும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

விருச்சிகம்: முன்னேற்றகரமான நாள். தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வரவுகள் உயரும். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்ப உறவுகள் ஒத்துழைப்பு தருவார்கள்.

தனுசு: பிறரது குற்றம் குறை சொல்லக் கூடாது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தன வரவு உண்டாகும்.

மகரம்: மன அழுத்தம் இருக்கும். பதற்றம், படபடப்பு இருக்கும். தியானம் செய்ய வேண்டும். வியாபாரம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த செய்தி வரும்.

கும்பம்: குதூகலமான நாள். வேலை மாற்றம் உண்டாகும். பிரிந்தவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பழைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

மீனம்: நல்லதொரு நாள். குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும்.