பிஸினஸில் மாற்றி யோசிக்க வேண்டும்; எதிரிகளை ஜெயிப்பீர்கள்!

45

பிஸினஸில் மாற்றி யோசிக்க வேண்டும்; எதிரிகளை ஜெயிப்பீர்கள்!

நவம்பர் 22 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (22-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பிரம்மாண்டமான சிந்தனைகள் தோன்றும். துர்க்கையை வழிபட வேண்டும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனை வரலாம். பேச்சுக்களினால் பிரச்சனை உண்டாகும். தன வருமானம் வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

ரிஷபம்: வேலை மாற்றம் உண்டாகும். யூடியூப் சேனல் தொடங்க வாய்ப்பு உண்டு. உடல் நலனில் அக்கறை தேவை. வேலை பார்க்கும் இடங்களில் அனுசரித்து செல்ல வேண்டும். சுப விசயங்கள் கூடி வரும்.

மிதுனம்: பூர்வ, புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டு. குல தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். தாயின் ஆசிர்வாதம் உண்டு. முன்னேற்றம் வரும். வியாபாரத்தில் வளர்ச்சி வரும்.

கடகம்: நன்மைகள் அதிகம் நடக்கும் நல்லதொரு நாள். வேலைக்கு முயற்சிக்கலாம். புதிதாக வீடு மனை வாங்கலாம். அரசு வேலைக்கு முயற்சிக்கலாம்.

சிம்மம்: நல்ல புகழ் பெறக் கூடிய நாள். நல்ல பயணங்கள் அமையும். உறவுகளின் நெருக்கம் உருவாகும். பயணங்களினால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதாரத்தில் செலவு உண்டு.

கன்னி: பேச்சைக் குறைக்க வேண்டும். வண்டி வாகனங்களில் கவனம் தேவை. அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும்.

துலாம்: கணவன் மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும். தேச நலன் முக்கியம். நல்ல வருமானம் பெருகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்: இனிய நாள். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். கவர்ச்சி இருக்கும். வசியப்படுத்துவீர்கள். உங்களது சொல்லுக்கு மயங்குவார்கள். கணவர் வீட்டாரது ஆதரவு கிடைக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. எதிரிகளை வெல்லக் கூடிய நாள்.

தனுசு: வெற்றி மீது வெற்றி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டு. பிஸினஸில் மாற்றி யோசிக்க வேண்டும். பொருளாதாரத்தில் உயர்வு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்க மருத்துவர் ஆலோசனை எடுக்கலாம்.

மகரம்: அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களுக்கு தொழில் வளர்ச்சி உண்டு. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வீட்டை பராமரிப்பு செய்வீர்கள்.

மீனம்: அனுகூலம் நிறைந்த நாள். மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான ஒரு நாள்.