புகழ், கௌரவம், அந்தஸ்து உயரும்!

141

புகழ், கௌரவம், அந்தஸ்து உயரும்!

செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்றைய (25-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 25 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நல்லதொரு நாள். உடல் நலக் குறைவு ஏற்படும். பதற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

கும்பம்: ஏராளமான சந்தோஷமான அனுபவங்களும், வரவும் கிடைக்கும். வியாபார தொடர்புகளில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் ஒரு இனிய நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். தான, தர்மங்கள் வெற்றி கொடுக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பயணங்களில் கூடுதல் கவனம் வேண்டும்.

தனுசு: எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெறும். கல்வியில், வேலை வாய்ப்பில், குடும்பத்தில் நிம்மதி பெருகும் நாள். மிகச் சிறந்த வெற்றிகள் தேடி வரும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்: கல்வி, கலைகளில் மேம்பாடு உண்டாகும். பதவிகள் தேடி வரும். பேரும், புகழும் உண்டாகும். பொறுப்புகள் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கூடுதல் வருமானம் வரும்.

துலாம்: உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்திற்கு தேவையான கடனுதவி கிடைக்கும். ஆதாயகரமான நாள். பேச்சில் கவனம் வேண்டும். பயணங்களில் எச்சரிக்கை வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: நன்மைகள் ஏராளமாக நடைபெறும். தாய் வழி சொந்தங்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரியின் ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. மூத்த பெண்களால் வாழ்க்கையில் உயர்வீர்கள்.

சிம்மம்: விபரீத ராஜயோகம். தடை வந்தால் வெற்றி உங்களுக்கு என்று நினைக்க வேண்டும். தாயாரின் உடல் நலனில் அக்கறை வேண்டும். எதையும், யோசித்து, சிந்தித்து பேச வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு கண், தொண்டை, மூக்கு ஆகியவற்றில் பிரச்சனை வரும்.

கடகம்: மூதாதையர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உடல் நலப் பிரச்சனைக்கு மருத்துவரின் ஆலோசனை எடுத்து கொள்வது நல்லது. நல்ல நண்பர்கள் அமைவார்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி, பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

மிதுனம்: சந்தோஷம் நிறைந்த அற்புதமான நாள். புகழ், கௌரவம், அந்தஸ்து எல்லாம் பெருகும். வியாபாரம் விரிவடையும். தாயாரின் உடல் நலனில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நல்ல வேலை வாய்ப்பும் அமையும்.

ரிஷபம்: மிகச் சிறப்பான வெற்றி தேடி வரும். வெற்றி பெற நினைக்கும் காரியங்களை இன்று செய்ய வேண்டும். மனதிற்கு பிடித்தவரை மணமுடிக்கும் வாய்ப்பு தேடி வரும். சுபகாரியங்கள் கூடி வரும். வியாபார தொடர்புகள் விரிவடையும்.

மேஷம்: அற்புதமான நாள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் இதமான ஒரு நாள். வேலை வாய்ப்பு அமையும். வேலை மாற்றமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு போட்டி பந்தயங்களை சமாளிக்க வேண்டி வரும். பெண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

https://fb.watch/8ehkDbWVno/