புகழ் பெறக் கூடிய காலம், உயர் பதவிகள் கிடைக்கும்!

48

புகழ் பெறக் கூடிய காலம், உயர் பதவிகள் கிடைக்கும்!

ஜூன் 28 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (28-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வருமானம் நன்றாக இருக்கும். மன தைரியம் அதிகரிக்கும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் கிடைக்கும். மனதில் தைரியம் குடி கொள்ளும்.

ரிஷபம்: மிக யோகமான ஒரு நாள். அழகாக தோற்றம் தருவீர்கள். பண விசயத்தில் இருந்த தடைகள் விலகும். பேச்சில் சாமர்த்தியம் இருக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுழிவு தெரியும். அற்புதமான நாள்.

மிதுனம்: மகிழ்ச்சியான நாள். பிஸினஸில் வெற்றி உண்டு. அறிவுத்திறன் வெளிப்படும். பாராட்டு கிடைக்கும் நாள். திறமைகளை பயன்படுத்துவீர்கள். முருகப் பெருமானை வழிபட எல்லா வெற்றியும் உண்டு.

கடகம்: இடமாற்றம் உண்டு. செலவுகள் கூடும். குரு பகவானை வழிபட வேண்டும். வெளிநாட்டு யோகம் வரும். சுப்பிரமணிய புஜங்கம் படிக்க வேண்டும்.

சிம்மம்: மிக இனிய நாள். நல்ல வேலை கிடைக்கும். இடமாற்றம் உண்டு. பதவி உயர்வும் உண்டு. உயர் அதிகாரிகளின் ஆதரவு கூடும். எண்ணிய எண்ணங்கள் வெற்றியடையும்.

கன்னி: யோகமான நாள். எதிர்பாராத விதமாக நன்மைகள் கூடும். வண்டி வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பிற்பகல் நேரம் நன்றாக இருக்கும். குருவாயூரப்பன் மற்றும் காமாட்சி அம்மனை தரிசனம் செய்ய வேண்டும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம்: அடக்கிவாசிக்க வேண்டிய நாள். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்க கூடாது. முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். வியாபாரத்தில் புதிய முதலீடு கூடாது.

தனுசு: மிக மிக யோகமான ஒரு நாள். புகழ் பெறக் கூடிய ஒரு காலகட்டம். அலுவலகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. அருமையான நாள்.

மகரம்: காதல் மலரும் நாள். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். இளைஞர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெறும்.

கும்பம்: புதிய புதிய வாய்ப்புகள் வரும். தன பெருக்கு உண்டு. மனதில் சந்தோஷம் உண்டு. பலரும் கவனிப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

மீனம்: அதிகார பதவிகள் கிடைக்கும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு. திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு யோகமான காலகட்டம்.