புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் கூடும்!

78

புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் கூடும்!

மே 18 ஆம் தேதியான இன்றைய (18-05-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: ஆதாயம் பெருகும் நல்ல நாள். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. நன்மைகள் அதிகம் நடக்கும் நல்லதொரு நாள்.

ரிஷபம்: நல்ல நல்ல செய்திகள் தேடி வரும். மனக்குழப்பம் இருக்கும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். நன்மைகள் அதிகம் நடக்கும்.

மிதுனம்: பிறர் மீது அன்பு காட்ட வேண்டும். நல்ல தெளிவு கிடைக்கும். யாரிடம் பழக வேண்டும், பழக கூடாது என்று தெளிவு கிடைக்கும். குடும்ப சூழல் என்ன என்று தெளிவு கிடைக்கும். மகிழ்ச்சியான ஒரு நாள்.

கடகம்: மனசு அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். கோபத்தை குறைக்க 20 நிமிடங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். காது வலி பிரச்சனை வரலாம்.

சிம்மம்: மிகப்பெரிய வெற்றிகள் பெறக் கூடிய ஒரு நாள். சில இழப்புகளை சந்திப்பீர்கள். நெருங்கிய பந்தங்கள் உலகத்தை விட்டு செல்லலாம். சிலருக்கு பொருட்கள் களவு போகும் நிலை வரும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

கன்னி: மிக மிக அதிர்ஷ்டகரமான நாள். ஏராளமான நன்மைகளை தாங்கி வரும் நல்லதொரு நாள். பிறரது உதவி கிடைக்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிகச் சிறந்த நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பயணங்களால் வெற்றி உண்டாகும். தலைப் பகுதியில் அடிபடும் வாய்ப்பு இருக்கும். இன்று நண்பர்களை புறக்கணிப்பது நல்லது. வியாபாரிகளுக்கு நல்ல நாள்.

விருச்சிகம்: முதலீடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பதற்றம், நெருக்கடி இருக்கும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. பயணங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் நல்ல நாள்.

தனுசு: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்று கொள்ள ஆர்வம் வரும். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்று ஆசை வரும்.

மகரம்: ஏராளமான நன்மைகள் தேடி வரும் நல்லதொரு நாள். செயல்பாடுகளில் நேர்மை தேவை. வியாபாரத்திற்கு நல்ல நாள்.

கும்பம்: அதிர்ஷ்டகரமான நாள். மிகச்சிறந்த வெற்றிகள் தேடி வரும். கடந்த கால பயம் காணாமல் போகும். எதையும் துணிந்து நிற்பீர்கள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வசந்தமான ஒரு நாள்.

மீனம்: ஏராளமான நன்மைகள், நற்செய்தி நிறைந்த நாள். வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிணக்குகள் நீங்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சிக்குரிய நாள்.