புதுமண தம்பதிகளுக்கு நற்செய்தி உண்டு!

41

புதுமண தம்பதிகளுக்கு நற்செய்தி உண்டு!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 18 ஆம் தேதியான இன்றைய (18-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: அற்புதமான நாள். குடும்ப மகிழ்ச்சிக்குரிய நாள். முருகப் பெருமானை நினைத்து மனதார வழிபட வேண்டும். வியாபாரம் வசியமாகும். உடல் நலனில் அக்கறை எடுக்க வேண்டும். எதிர்பாராத தன வரவு உண்டு.

ரிஷபம்: அக்கம் பக்கத்தாரோடு நல் உறவு இருக்கும். அலுவலக நண்பர்கள் வாழ்க்கையில் உதவி செய்வார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சுபச் செய்திகள் கூடி வரும்.

மிதுனம்: நல்ல நாள். தன வரவு பெருகும். சொல்லுக்கு மதிப்பு கூடும் நாள். பிள்ளைகளால் நன்மை. தொழில் மூலம் வெற்றி. கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

கடகம்: மன அழுத்தம் இருக்கும். ஐயப்பனை வழிபட வேண்டும். வியாபாரத்தில் நேக்கு போக்காக நடந்து கொள்ள வேண்டும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தான தர்மங்கள் செய்ய வேண்டும். பெருமாள் வழிபாடு செய்வதன் மூலம் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சிம்மம்: எதிர்பாராத தன வரவு உண்டு. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி உண்டு. வேலை மாற்றம் தொடர்பான முயற்சி வெற்றி பெறும். வயிற்று வலி உபாதைகள் இருக்கலாம். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் நல்ல நாள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி: வெற்றி மீது வெற்றி வரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். மூத்தவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி வெற்றி கொடுக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: இனிய நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்க்கும் நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் வெற்றி உண்டு.

விருச்சிகம்: வெற்றிகளை சூடும் நாள். வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி பெறும். சுப செய்திகள் தேடி வரும். வியாபார முயற்சி வெற்றி பெறும். புதுமண தம்பதிகளுக்கு நல்ல செய்தி உண்டு. குடும்ப பகை தீரும்.

தனுசு: முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தொழிலில் வெற்றி உண்டு. கண்களில் பிரச்சனை வரலாம்.

மகரம்: நிறைய மாற்றங்கள் உண்டு. வெளிநாட்டு தொடர்பு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். சிறு பூச்சிகளினால் தொந்தரவு வரலாம்.

கும்பம்: அதிர்ஷ்டகரமான நாள். தேவையான கடனுதவி கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வீடு, மனை வாங்கும் திட்டம் மேலோங்கும். கவனமாக செயல்பட வேண்டும். பேராசை பெரு நஷ்டம் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். கல்வி முயற்சிகள் வெற்றி பெறும். காது வலி பிரச்சனை வரலாம்.

மீனம்: முன்னேற்றமான நாள். நல்ல தன வரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி நிலவும். குல தெய்வத்தின் ஆசிர்வாதம் உண்டு. தான தர்மங்கள் செய்ய வேண்டும். புத்தாடை வாங்கும் யோகம் உண்டு. மின் சாதனங்கள் பழுதடையும் நிலை வரும். அலுவலகத்தில் இயந்திர கோளாறுகள் வரலாம். ஊர் மெச்சும் வாழ்க்கை உண்டு.