பெண்கள் தங்களை அழகுபடுத்துவதில் அக்கறை கூடும்!

86

பெண்கள் தங்களை அழகுபடுத்துவதில் அக்கறை கூடும்!

செப்டம்பர் 23 ஆம் தேதியான இன்றைய (23-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 23 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: நண்பர்களால் நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நல்லதொரு நாள். குடும்பத்தில் நிம்மதி பெருகும். தன லாபம் அதிகரிக்கும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள்.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மனோ தைரியம் அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெறும். அதிர்ஷ்டம் தேடி வரும். வண்டி வாகன பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்: நின்று, நிதானித்து செயல்பட வேண்டும், பிஸினஸ் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப தேவைகள் நிறைவேறும். பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உள்ளங்கால், உள்ளங்கையில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு.

தனுசு: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். குல தெய்வ அனுக்கிரகம் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். அலுவலகத்தில் பதவி உயர்வு வரும். வேலை வாய்ப்பு அமையும். தன லாபம் உண்டு.

விருச்சிகம்: வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழில் முயற்சி வெற்றி பெறும். சொத்து, சுகம் வாங்குவீர்கள்.

துலாம்: சந்தோஷமான நாள். மனதிவில் விரும்பியவரை விரும்பிய படியே திருமணம் செய்ய ஏற்ற நாள். குடும்பத்தில் கணவன் – மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் அக்கறை காட்டுவீர்கள். சந்தோஷ அனுபவங்கள் கூடும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: நன்மைகள் ஏராளமாக நடைபெறும். ஆனால், மௌனமாக இருக்க வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. தன லாபம் உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்: பாக்யமான நாள். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்க்கும் செய்தி வந்து சேரும். பெண்களுக்கு நல்ல நாள். அக்கம் பக்கத்தினருடன் இருந்த பிரச்சனை விலகும். தன லாபம் உண்டு.

கடகம்: வேலை வாய்ப்பு கிடைக்கும். கணபதி மந்திரத்தை உள்ளங்கையில் எழுதிக் கொண்டால் வெற்றி உண்டாகும். முன்னேற்றமான ஒரு நாள். தன வரவு உண்டு. நெற்றி, தொண்டையில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்: மனமகிழ்ச்சியான நாள். சாமர்த்தியசாலிகள். பண விவகாரங்கள் மூலமாக வருமானமும், செலவும் உண்டு. தலைவலி, உடல் வலி வந்து செல்லும். சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

ரிஷபம்: பெண் தெய்வத்தை வழிபட வேண்டும். பட்டம் பெறும் யோகம் உண்டு. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி கிடைக்க முயற்சிக்கலாம். ஏராளமான நன்மைகள் நடைபெறும். நட்பு வட்டாரத்தில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்.

மேஷம்: வாழ்க்கையில் முன்னேற்றமான நாள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். திருமண வரன் தேடி வரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

https://www.youtube.com/watch?v=nklVc5CXCg8