பேசாமல் இருந்தால் நல்லது: கும்பம் ராசி ஆவணி மாத பலன்!

54

பேசாமல் இருந்தால் நல்லது:கும்பம் ராசி ஆவணி மாத பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் கும்பம் ராசி ஆவணி மாத ராசி பலன்…

கும்ப ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் 2021…

சிறப்பான ஒரு மாதம். கௌரவம், புகழ், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும். பண வரவு திருப்தியாக இருக்கும். ஆனால், கொடுக்கல், வாங்கல் வேண்டாம். பிள்ளைகளால் பெருமிதம் உண்டு. குல தெய்வ அனுக்கிரகம் உண்டு. ரிஷிகள், முனிவர்கள், குருமார்களின் ஆசிர்வாதம் கண்டிப்பாக கிடைக்கும்.

குடும்பத்தில் குழப்பம் இருக்கும். பிரச்சனை, சண்டை, சச்சரவு, பிரிவினை இருக்கும். சொந்த பந்தமிடையே சண்டை வரும், விருந்தினர்கள் வந்தாலும் சண்டை வரும். வருமானத்தில் தடை இருக்கும். உங்கள் பேச்சு எங்கும் எடுபடாது. கூடுமானவரை பேசாமல் இருப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க: ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் கும்பம் ராசிக்கான ஆவணி மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

இளைய சகோதரத்தால் ஆதரவு உண்டு. வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். அனைத்து துறையிலும் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து சந்தோஷமாக இருக்கும் மாதம். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாயாருடன் கருத்து வேறுபாடு வரும். வண்டி, வாகனங்கள் செலவு வைக்கும் ஒரு அமைப்பு இருக்கும். படிக்கும் மாணவ, மாணைவிகள் அதிக சிரத்தையுடன் படிக்க வேண்டும். வீட்டுச் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.

குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். ரிஷிகள், முனிவர்கள், குருமார்களின் ஆசிர்வாதம் இருக்கும். கடன் சுமை கூடும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும். பிறந்த வீட்டிலிருந்து பணமோ, நகையோ கொண்டு வரும் அமைப்பு. தந்தையால் அனுகூலம் உண்டாகும். அசையா சொத்துக்கள் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான ஒரு மாதம்.

திருமண வயதில் இருப்பவர்களுக்கு அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்த யோகம் உண்டு. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாழ்க்கைதுணை வழியில் பொருள் வரவு, பண வரவு இருக்கும். வாரிசு இல்லாத குடும்பங்களுக்கு உங்களை வாரிசாக தேர்வு செய்து அவர்களது சொத்துக்களை உங்களது பெயரில் எழுதிக் கொடுக்கும் யோகம் உண்டு. வெளியூர், வெளிநாட்டு பயணம் தாராளமாக செல்லலாம்.