பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்!

77

பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்!

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 30 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வங்கி கடன் பிரச்சனை வரும். கணவன் – மனைவி உறவில் விரிசல் வரும். கிருஷ்ணர் வழிபாடு சிறந்த பலன் அளிக்கும். மாணவர்கள் போட்டி பந்தயங்களை சமாளிக்க வேண்டி வரும். மற்றவர் விஷயங்களில் தலையிடக் கூடாது.

ரிஷபம்: கிருஷ்ணர் வழிபாடு சிறந்த பலன் அளிக்கும். பகவத் கீதை படித்தால் வாழ்க்கை உயர்வடையும். குடும்பத்தில் நன்மை, வியாபாரத்தில் வெற்றி, வியாபார செழிப்பு உண்டு, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.

மிதுனம்: எண்ணிய காரியங்கள் இனிதாக முடியும். செலவுகள், அலைச்சல்கள் இருக்கும். அனுகூல தகவல்கள் உண்டு. வாழ்க்கையில் வளம் பெறும் நல்ல நாள். கணவன் – மனைவி உறவில் சந்தேகம் இருக்க கூடாது.

கடகம்: மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் செழிப்பு, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டு. நண்பர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: வெற்றிகளை பெறப் போகும் நாள். எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம். குடும்ப நிம்மதி, நல்ல தனலாபம் உண்டு. பிறரைப் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

கன்னி: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். புகழ், கௌரவம், அந்தஸ்து பெருகும். வியாபாரம் செழிக்கும். கல்வியில் முன்னேற்றம். சுபச் செய்திகள் வீடு தேடி வரும்.

துலாம்: பொறுமை அவசியம். ஓரளவு அனுகூலமான தகவல் வந்து சேரும். மிக மிக சிறந்த நாள். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

விருச்சிகம்: பக்குவம் அறிந்து செயல்பட வேண்டும். வெற்றிகள் தேடி வரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். முயற்சிகள் வெற்றி பெறும். தான தர்மங்கள் செய்வது நல்லது.

தனுசு: மனச் சலனங்கள் இருந்து கொண்டே இருக்கும். வியாபார ரகசியங்களை யாரிடமும் வெளியிடக் கூடாது. சாதகமான பல நன்மைகளை கொடுக்கும். பேச்சுவார்த்தையில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்: இதமான நன்மைகள் தேடி வரும் நாள். திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகள் இன்று எடுப்பீர்கள். வியாபார விஷயங்களில் அழகான வெற்றிகளை பெறுவீர்கள். நல்ல தன வரவு வந்து சேரும்.

கும்பம்: புதிதாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசை வரும். தாயாரின் உடல் நலனில் அதிக கவனம் வேண்டும். வெற்றிகள் தேடி வரும். சங்கடங்கள் தீரும்.

மீனம்: மன தைரியம் அதிகரிக்கும். வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையும். வெளிநாட்டு தொடர்புகள் விரிவடையும். செய்யும் செயல்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு நன்மைகள் தரும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

https://www.youtube.com/watch?v=yVRjlovPkPg