பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும்; புதிய வேலை கிடைக்கும்!

46

பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும்; புதிய வேலை கிடைக்கும்!

நவம்பர் 16 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (16-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: சுய கௌரவம் பெருகும். வீர கலைகள் தெரியும். வாய்ப்புகள் தேடி வரும். இன்று பெண் பார்க்க கூடாது. நாக தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பிஸினஸில் முதலீடு கூடாது.

ரிஷபம்: மனதில் காம எண்ணங்கள், காதல் எண்ணங்கள் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு வெற்றி உண்டு. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். காதல் திருமணம் செய்ய ஏற்ற நாள். வேலையில் பதவி உயர்வு உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மிதுனம்: கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

கடகம்: இனிமையான நாள். செய் தொழில் எதுவாக இருந்தாலும் வெற்றி உண்டு. சுபகாரிய பேச்சுவார்த்தை நன்மையாக முடியும். கேளிக்கை விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அருமையான நாள். வியாபாரத்திலுள்ள சிக்கல்கள் தீரும். மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும்.

சிம்மம்: மனதில் குழப்பம் உண்டாகும். தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை. வம்பு, வழக்கு பிரச்சனைக்கு விநாயகரை வழிபட வேண்டும். வீடு கட்டும் யோகம் உண்டு. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். கோலமிட்டால் தெய்வத்தின் அருள் கிடைக்கும். விளக்கேற்றி வைத்து இறைவனை வழிபட வேண்டும்.

கன்னி: முன்னேற்றமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றியாகும். துறை சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். காதல் உணர்வுகள் மேலோங்கும். பிஸினஸில் சக வியாபாரிகள் ஒத்துழைப்பு தருவார்கள்.

துலாம்: வெற்றிகரமான நாள். தன லாபம் உண்டு. பேச்சு சாமர்த்தியம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும்.

விருச்சிகம்: தாயாரை வழிபட வேண்டும். அம்மாவின் அருள் கிடைக்கும். பாஸ்போர்ட் அமையும். விசா தடங்கள் நீங்கும். கவலைகள் நீங்கி சந்தோஷம் பெருகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு: சந்தோஷமான நாள். காலையில் மனக்குழப்பங்கள் இருக்கும். முக்கிய முடிவுகளை மாலையில் எடுப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும்.

மகரம்: நன்மைகள் நிறைந்த நாள். பிஸினஸில் வெற்றி உண்டு. புத்தாண்டு ஏராளமான நன்மைகளை தரும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. குடும்பத்தில் ஆனந்தம் உண்டு.

கும்பம்: வெற்றிகரமான நாள். வேலை பார்க்கும் இடங்களில் நல்ல சூழல் அமையும். நல்ல வேலை கிடைக்கும். பற்கள் தொடர்பான பிரச்சனைக்கு மருத்துவர் ஆலோசனை கிடைக்கும். பென்ஷன் பிரச்சனை சரியாகும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் கூடி வரும் நாள்.

மீனம்: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தான, தர்மங்கள் செய்ய வேண்டும். பிஸினஸில் முன்னேற்றமான செய்தி கூடி வரும்.