பொய் சொல்லி ஒருவரை காப்பாற்றுவீர்கள்!

31

பொய் சொல்லி ஒருவரை காப்பாற்றுவீர்கள்!

அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியான இன்றைய (23-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 23 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சுகமான நாள். வருமானம் அதிகரிக்கும். பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் நன்மை நடக்கும்.

கும்பம்: அருமையான நாள். நண்பர்களால் நன்மை உண்டு. தன லாபம் அதிகரிக்கும். உடல் நல பாதிப்பு வரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்: அனுபவங்களுக்கு வெற்றி உண்டாகும். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பது புரியும். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று தெரிந்து கொள்வீர்கள். நீதிக்கு புறம்பான செயல்களை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் அக்கறை வேண்டும்.

தனுசு: வெற்றி உண்டாகும். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேசுவீர்கள். துடிப்பான செயல்கள் வெளிப்படும். தன லாபம் உண்டு. தொட்டது எல்லாம் துலங்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: திட்டமிட்டு செய்வீர்கள். நன்மை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தன லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டு.

துலாம்: மகிச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டாகும். வியாபாரம் நன்றாக இருக்கும். தன வரவு உண்டாகும். சிக்கல்கள் வந்து நிவர்த்தியாகும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: எண்ணங்கள் ஈடேறும். தொட்ட காரியங்கள் துலங்கும். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் கொடுக்க, வாங்கல் சுமூகமாக முடியும்.

சிம்மம்: இனிமையான நாள். வேலை வாய்ப்பு அமையும். கணவன் மனைவி பிரச்சனை சரியாகும். பிள்ளைகள் வழியில் ஆனந்தம் உண்டு. வேளைப்பளு அதிகரிக்கும்.

கடகம்: சந்தோஷமான அனுபவம் பெருகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் சலசலப்பு உண்டாகும்.

மிதுனம்: ஒரு நல்ல நாள். எண்ணங்கள் எல்லாம் ஈடேறும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் உடல் நலப் பிரச்சனை தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்: ஒருவரது நன்மைக்காக பொய் சொல்வீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் நன்றாக இருக்கும். மனக்கவலை இருந்து கொண்டே இருக்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.

மேஷம்: கடனுதவி கிடைக்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். பல் வலி வரும். தன லாபம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.