பொருளாதார உயர்வு உண்டு; ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது!

58

பொருளாதார உயர்வு உண்டு; ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது!

செப்டம்பர் 14 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (14-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பரபரப்பான நாள். வேலை நெருக்கடி இருக்கும். வேலை வாய்ப்பு அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்க சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். வியாபாரிகளுக்கு கூடுதலான லாபம் கிடைக்கும்.

ரிஷபம்: சுப நிகழ்ச்சிகள் கூடி வரும் நாள். தடைகளும் வரும். கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். முருகனை வழிபாடு செய்ய எல்லா வளமும் உண்டாகும். உள்ளூர் வியாபாரம் நன்றாக இருக்கும். ஞாபக மறதி நீங்கும்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். மனதில் உள்ள ஆசைகள் எல்லாம் நிவர்த்தியாகும். சிலர் ஆட்டி வைப்பார்கள். யாருக்கும் ஆடக் கூடாது. சுய அறிவு கொண்டு செயல்பட வேண்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். அருமையான நாள்.

கடகம்: நல்ல வருமானம் வரும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல வருமானம் உண்டு. நீண்ட தொலைவிலிருந்து நல்ல தகவல் வரும். எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும்.

சிம்மம்: நல்ல பெயர் பெறுவீர்கள். பொதுமக்கள் துறையில் இருப்பவர்களுக்கு பெயரும், புகழும் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வியாபாரத் தொடர்பு கிடைக்கும்.

கன்னி: எதைச் செய்தாலும் பக்குவமாக, நிதானமாக செய்ய வேண்டும். மனசு கொஞ்சம் வேகமாக அலை பாயும். மூளை கொண்டு யோசித்து செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பிஸினஸில் நல்ல லாபம் உண்டு. பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எல்லா நன்மைகளும் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும்.

விருச்சிகம்: உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நாள். நண்பர்களை அதிகம் சம்பாதிக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வழக்கறிஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள்.

தனுசு: நன்மைகள் அதிகம் நடக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி. பொருளாதார உயர்வு உண்டு. புதிய பிஸினஸ் தொடர்பு உண்டாகும். மனதில் சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். எண்ணங்கள் சீர் பெறும். வியாபார நோக்கங்கள் நிறைவேறும்.

மகரம்: வீடு வாங்கும் யோகம் உண்டு. தாயாரது உடல் நலனில் அக்கறை தேவை. வியாபார ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது. கணவன் மனைவிக்கிடையில் உள்ள அந்தரங்க விஷயங்களை பிறரிடம் சொல்லக் கூடாது. குடும்பத்தில் தோற்றுப் போக வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு எல்லா வெற்றிகளையும் தரும்.

கும்பம்: மிக அருமையான நாள். அநீதிகளை கண்டு பொங்குவீர்கள். மன தைரியம் பெருகும் நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். வியாபாரத்தில் வளமான நாள். எல்லா காரியத்திலும் வெற்றி உண்டாகும்.

மீனம்: மகிழ்ச்சிக்குரிய நாள். தன வருமானம் பெருகும். குடும்பத்தில் வாக்கு வாதம் கூடும். சுப காரியங்கள் கூடி வரும். உடல் நலனில் அக்கறை தேவை. அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது.