பொருளாதார வளர்ச்சி உண்டு, வெற்றிகள் நிறைந்த நாள்!

22

பொருளாதார வளர்ச்சி உண்டு, வெற்றிகள் நிறைந்த நாள்!

ஜூன் 29 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (29-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: மன தைரியம் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். தாயாரது உடல் நலனில் கவனம் வேண்டும். சிறு தூர பயணங்கள் அமையும். நல்ல நண்பர்கள் தேவை. கூடுதல் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

ரிஷபம்: பயணங்களினால் கூடுதல் செலவு உண்டாகும். சுப காரிய பேச்சுவார்த்தை நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் நல்ல செய்தி உண்டு.

மிதுனம்: மிக மிக அற்புதமான ஒரு நாள். வாழ்க்கையில் நினைக்கும் எண்ணங்கள் எல்லாம் வெற்றி பெறும். ஆடம்பர செலவுகள் உண்டாகும். மகழுக்காக செலவு செய்வீர்கள். இடமாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வெற்றி உண்டு.

கடகம்: உத்தியோக மாற்றம் குறித்து எண்ணம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். புதிய வியாபாரம் ஆரம்பிப்பீர்கள்.

சிம்மம்: மிக அனுகூலமான ஒரு நாள். வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் எல்லாம் தீரும். இறைவழிபாடு சந்தோஷத்தை தரும்.

கன்னி: இந்நாள் இனியநாள். நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு யோகம் கிடைக்கும். திருமண விஷயங்கள் அழகாக கை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிக இனிய நாள். வாழ்க்கையில் லாபம் உண்டு. தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். அதிர்ஷ்டமான ஒரு நாள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இளம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமண வரன் அமையும்.

விருச்சிகம்: பொறுமையாக செயல்பட்டு வெற்றி காண வேண்டிய நாள். வேலைமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் உண்டாகும். தொலைதூரத்து பயணங்களில் பாதுகாப்பு தேவை. புதிய பதவிகள் கிடைக்கும்.

தனுசு: மிக அற்புதமான நாள். வெற்றிகள் தேடி வரும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டு. அனுகூலமான ஒரு நாள்.

மகரம்: உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். பிஸினஸ் பார்ட்னர்ஸை பகைத்துக் கொள்ளக் கூடாது. வங்கி கடனுதவி கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: யோகமான ஒரு காலகட்டம். காதல் திருமணம் கை கூடும். பிள்ளைகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உருவாகும். எண்ணிய எண்ணங்கள் வெற்றி பெறும்.

மீனம்: மிக மிக நல்ல நாள். தாய்மை பேறு கிடைக்கும். குல தெய்வங்களை வழிபட வேண்டும். மாரி, காளி, விநாயகரை வழிபட வேண்டும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு.