பொல்லா பிள்ளையரை வழிபட வேண்டும்!

97

பொல்லா பிள்ளையரை வழிபட வேண்டும்!

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…

செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்றைய (10-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 10 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: காலைப் பொழுது கனிவான பொழுது. வியாபாரத்தில், கல்வியில், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலனில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இரெட்டை விநாயகரை வழிபட வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கும்பம்: பிற்பகலில் மிகுந்த நன்மைகள் உருவாகும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில், கல்வியில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வருவதற்கு விநாயகர் நான்மணிமாலையை படிக்க வேண்டும். ஓம் கம் கணபதியே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

மகரம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள். வியாபாரத்தில் தொலைதூர செய்திகள் வந்து சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும். தூர்வா கணபதியை வழிபட வேண்டும். அருகம்புல் கொண்டு தூர்வா கணபதியை வழிபட வேண்டும்.

தனுசு: மகிழ்ச்சி ததும்பும் நல்லதொரு நாளாக இந்த நாள் அமையும். இந்த நாளில் செய்யும் முயற்சிகள் அனைத்தும் பல மடங்கு வெற்றி கொடுக்கும். இந்த நாளில் பொல்லாப் பிள்ளையாரை வழிபட வேண்டும். திருமணம் தொடர்பான செய்திகள் தேடி வரும்.

விருச்சிகம்: ஹேரம்ப கணபதியை வழிபட வேண்டும். குடும்ப பிரச்சனைகள் தீரும். வியாபார கஷ்டங்கள் தீரும். சுபகாரியங்கள் கூடி வரும். அபூர்வமான வெற்றிகள் தேடி வரும்.

துலாம்: பதற்றம் இருக்கும். உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். மிகச்சிறப்பான நாள். வியாபாரிகள் முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஈச்சநாரி விநாயகரை வழிபட வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: ஏகதந்த கணபதியை வழிபட வேண்டும். ஓம் ஏகந்தாய நமஹ என்று 108 முறை மந்திரம் சொல்லி வழிபட வேண்டும். பெண்களுக்கு அனுகூலமான நாள்.

சிம்மம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட வேண்டும். ஓம் கற்பக விநாயகனே போற்றி என்று 108 முறை சொல்லி வழிபட வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும். வியாபாரம், குடும்பம் என்று அனைத்திலும் சந்தோஷமான நாள்.

கடகம்: உச்சிஸ்ட கணபதியின் அனுக்கிரகம் கிடைக்கும் அற்புதமான நாள். நெற்றியில் குங்குமமிட்டுக் கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் உண்டு.

மிதுனம்: சக்தி கணபதியை வழிபட வேண்டும். வியாபாரம் செழிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். செல்வ நிலை உயரும். அளவான நன்மைகள் உண்டு.

ரிஷபம்: மகா கணபதியின் அனுக்கிரகத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய அற்புதமான நாள். வியாபாரம் செழிக்கும். குடும்பத்தில் நன்மைகள் பெருகும். சுபகாரியங்கள் கூடி வரும். கல்வி வளர்ச்சி மேம்படும். மொத்தத்தில் சந்தோஷமான நாள்.

மேஷம்: அற்புதமான நாள். வியாபாரம் செழிக்கும். செல்வம் பெருகும் நாள். இளைஞர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு நல்ல மங்களகரமான செய்திகள் தேடி வரும்.

https://www.youtube.com/watch?v=08xMi8Eqkpg