பொழுதுபோக்கு விசயங்களில் எச்சரிக்கை தேவை!

33
இன்றைய ராசிபலன்

பொழுதுபோக்கு விசயங்களில் எச்சரிக்கை தேவை!

நவம்பர் 27 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (27-11-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: எடுக்கும் முயற்சிகள் வெற்றி கொடுக்கும். சுப காரிய விசயங்கள் கூடி வரும். வாகனங்களை பழுது நீக்கி பயன்படுத்த வேண்டும்.

ரிஷபம்: உறவுகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது. பயணங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை. புதிய முயற்சி கூடாது. சகோதர, சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்: அனுக்கிரகமான நாள். தாயின் அன்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. பகைவர்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை. மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. கடனுதவி கிடைக்கும்.

கடகம்: மிக அருமையான நாள். பொழுதுபோக்கு விசயங்களில் ஈடுபாடு இருக்கும். மாற்றங்கள் நிறைந்த நாள்.

சிம்மம்: பூர்வ, புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். தாயின் ஆசிர்வாதம் கிடைக்கும். பொழுதுபொக்கு விசயங்களில் ஈடுபாடு இருக்கும்.

கன்னி: எங்கும், எதிலும் வெற்றி உண்டாகும். சித்தர்கள் வழிபாடு செய்ய வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. சிறு தூர பயணங்களில் வெற்றி உண்டாகும்.

துலாம்: இனிய நாள். மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாக்கிற்கு மதிப்பு கிடைக்கும். அனுகூலமான நாள். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

விருச்சிகம்: பகைவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு: தாயாரது ஆதரவு கிடைக்கும். வருமானம் கூடும். எண்ணிய காரியங்கள் வெற்றியடையும். பொழுதுபோக்கு விசயங்களில் எச்சரிக்கை தேவை. குடும்ப உறுப்பினர்களால் நிம்மதி உண்டு.

மகரம்: தொட்டது துலங்கும் அருமையான நாள். குடும்பத்து பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார வளர்ச்சி உண்டு.

கும்பம்: நன்மைகள் அதிகம் நடக்கும் நல்லதொரு நாள். தாயாரது ஆசிர்வாதம் கிடைக்கும். மாமியார் ஆசிர்வாதம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

மீனம்: இதமான நாள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. குடும்ப உறவுகள் அனுசரணையாக இருப்பார்கள். சந்தோஷமான அனுபவங்கள் நிறைந்த நாள்.