போலீஸ், கட்ட பஞ்சாயத்து பிரச்சனை வரும்!

76

போலீஸ், கட்ட பஞ்சாயத்து பிரச்சனை வரும்!

செப்டம்பர் 17 ஆம் தேதியான இன்றைய (17-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 17 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: சந்தோஷ அனுபவங்கள் நிறைந்த ஒரு நல்லதொரு நாள். கேட்ட வரம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வியாபார வளர்ச்சி உண்டு. அந்நிய தேச தொடர்புகள் விரிவடையும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். வேலை வாய்ப்பு அமையும்.

கும்பம்: இதமான நாள். வெற்றிகள் வந்து சேரும். இடமாற்றம், தொழில் மாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீடு கட்ட முயற்சி மேற்கொள்வதாக இருந்தால் சொந்த ஜாதகத்தை பார்த்து அதன் பிறகு செய்யுங்கள். இன்று வியாபாரத்தில் யாரையும் நம்பக் கூடாது. தன லாபம் உண்டு.

மகரம்: பதற்றம் இருக்கும். தியானம் செய்ய வேண்டும். வியாதிகள் குணமாகும். கடந்த கால பிரச்சனைகள் விலகும். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். வியாபார தொடர்புகள் விரிவடையும். முன்னோர்கள் சொத்துக்கள் கிடைக்க யோகம் உண்டாகும்.

தனுசு: மிகச்சிறந்த நாளாக உங்களது வாழ்க்கையில் அமைகிறது. பேச்சு வார்த்தையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் கோபம் காட்ட கூடாது. வாக்கு, வாதங்களை தவிர்க்க வேண்டும். நேர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளையும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.

விருச்சிகம்: இனிய நாளாக அமையும். உடல் நலனில் கவனம் வேண்டும். வியாபாரிகளுக்கு பொற்காலமாக அமையும். தன, தான்ய விருத்தி உண்டு.

துலாம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் ஒரு நாள். பெண்களுக்கு பொற்காலம். பெண் குழந்தை பிறக்கும் குடும்பங்கள் சிறக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

கன்னி: இனிய நாள். குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வெற்றிகள் வந்து குவியும் நாள். மாணவர்களுக்கு கல்வித்திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சமூக வலைதள பயன்பாட்டில் மட்டும் கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

சிம்மம்: அற்புதமான நாள். நல்ல பொருளாதார உயர்வை தரும். பிள்ளைகள் வழியில் மன கவலை இருந்து கொண்டு இருக்கும். குரு வழிபாடு நன்மையளிக்கும். அக்கம் பக்கத்தினரால் இருந்த பிரச்சனை விலகும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஒரு நாள்.

கடகம்: எல்லா காரியங்களும் விரைவாக நடைபெறும். ஆனால், மன சஞ்சலம் இருக்கும். பெண்களுக்கு புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சித்தர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனை அளிக்கும்.

மிதுனம்: வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றம் காத்துக் கொண்டிருக்கிறது. தேவையில்லாமல் கோபம் வரும். திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. வியாபாரிகளுக்கு லாபம் உண்டு. பெண் தொழில் முனைவோருக்கு லாபம் இருக்கிறது. தெய்வீக ஆற்றல் பெருகும் நாள். உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.

ரிஷபம்: அன்பு எல்லா வகையான விஷங்களிலும் ஜெயித்து விடும். குல தெய்வ வழிபாடு செய்யலாம். வியாபாரத்தில் வளர்ச்சி பெறக் கூடிய ஒரு அற்புதமான நாள். தந்தை வழி உறவுகளில் சில இழப்புகள் இருக்கலாம். வேலை வாய்ப்பில் சிலருக்கு பிரச்சனை வரும்.

மேஷம்: போட்டி, பந்தயங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். சிலர் வம்பு, வழக்குகளை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எல்லாம் ஒதுங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால், போலீஸ் ஸ்டேஷன், கட்ட பஞ்சாயத்து என்று பல சிக்கல்கள் வரும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். வியாபாரிகளுக்கு அனுசரணையான நாள். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி பெருகும் நாள்.

https://www.youtube.com/watch?v=apLG3wJ6IdE