மகரம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன்!

68

மகரம் ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன்!

நஞ்சநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் மகரம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021…

இந்த மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, வாழ்க்கையில் நீங்கள் தெளிவான முடிவுகளை எடுக்கும் மிகச்சிறந்த மாதமாக இந்த மாதம் இருக்கும். எதிலேயும், எப்பொழுதும் தங்களது தகுதிக்கு எது ஒத்துவரும் என்ற உண்மையை புரிந்து கொண்டவர்கள். பல நன்மைகள் அமையக் கூடிய மாதம்.

மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சனி பகவான் ராசியிலேயே இருக்கிறார். சனி பகவான், நீதிமான், நேர்மை என்பதைக் குறிக்கும். ஜாதகத்தில் தன ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார் என்றால், முற்பிறவியில் தனம் சம்பந்தமாக நாம் செய்த பாவங்கள் என்ன என்பதை நமக்கு உணர்த்தி, அதனை நீக்குவதற்கு சனி பகவான் வருகிறார். இதைப் போன்று ஜென்மத்தில் சனி பகவான் இருக்கிறார் என்றால், வாழ்க்கையில் நாம் செய்த தவறுகளை நமக்கு சுட்டிக் காட்டி நம்மை அழகான ஒரு நல்ல மனிதராக மாற்றுவார்.

மேலும் படிக்க: மகரம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

மாதம் முழுவதும் ஊருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய காவல் தெய்வங்களை வழிபட வேண்டும். தன ஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் நல்ல தன லாபத்தை, வரவை, மேன்மையை ஏற்படுத்தித் தருவார். நான் இந்த வேலையில் இருந்தேன். எனக்கு வேலை பறிபோய்விட்டது. எனக்கு திரும்ப வேலை கிடைக்குமா என்ற கவலை இருந்து கொண்டே இருக்கிறது. அந்த கவலை நீங்கு நல்ல வேலை கிடைக்கும்.

10க்கு உடைய சுக்கிர பகவான் இந்த மாதம் 13 ஆம் தேதி உங்களுக்கு பாக்ய ஸ்தானமான 9ஆம் இடத்திற்கு வருகிறார். இதனால் மாற்றங்கள் உண்டாகும். 24ஆம் தேதிக்குப் பிறகு மிகச்சிறந்த உயர்வு உங்களது வாழ்க்கையில் உண்டாகும். வேலையில் இருந்த தடைகள் எல்லாம் விலகும். ஏனென்றால், 24 ஆம் தேதியிலிருந்து உங்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம். தர்ம ஸ்தானதிபதியான புதனும், கர்ம ஸ்தானதிபதியான சுகிரனும் இணைந்துவிடுகிறார்கள். அந்த இணைவு மிகச்சிறந்த வெற்றியை ஏற்படுத்தித் தரும்.

நீங்கள் செய்த தான தர்மங்கள் உங்களை காக்கும். ஏற்கனவே ராசியில் சனி பகவான் இருப்பது உங்களது குழப்பங்களை எல்லாம் நீக்கிவிடும். அதனால், வேலையில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாதம் தர்ம கர்மாதிபதி யோகம் மூலமாக உயர்ந்த இடத்திற்கு செல்வார்கள். யாருக்கெல்லாம் வேலை வாய்ப்பில் பிரச்சனை இருந்ததோ, அவர்களுக்கு எல்லாம் வேலை பெற்றுத் தருவார்.

வியாபாரத்தில் முதலீடு செய்தோம். ஆனால் எடுக்க முடியவில்லை. சரி, புதுவியாபாரம் தொடங்கலாம் என்று பார்த்தால் மனதில் ஒரு எண்ணம் தடுக்கிறது. வியாபாரத்திற்கும் வரும் 24 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல நேரம் ஆரம்பமாகிறது. அதுவரை முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.