மகாலட்சுமி விரதம் இருக்க வேண்டும்!

38

மகாலட்சுமி விரதம் இருக்க வேண்டும்!

செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்றைய (11-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 11 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: எதிலும் பொறுமையிருந்தால் வெற்றி உண்டு. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தாயாரின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தன லாபம் உண்டு. நீண்ட கால வெற்றி உண்டாகும்.

கும்பம்: எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் தேடி வரும் நாள். இதுவரையில் இருந்த மனக்கசப்புகள் விலகும் நாள். உங்களது எதிரிகள் தானாகவே ஒதுங்கி செல்வார்கள். வியாபாரத்தில் வெற்றி பெறும் நாள்.

மகரம்: தொட்டது துலங்கும் நல்லதொரு நாள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். பெண்களுக்கு முன்னேற்றமான நாள்.

தனுசு: எண்ணிய காரியங்கள், எண்ணியபடியே வெற்றியாக முடியும். சுபகாரியங்கள் கூடி வரும். பெண்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கம்பியூட்டர் துறையில் வேலை கிடைக்கும். ஆனால், பேச்சில் மட்டும் கவனம் வேண்டும்.

விருச்சிகம்: எல்லா காரியங்களும் வெற்றியாக முடியும். வேலை மாற்றத்திற்கு முயற்சிக்கலாம். குடும்பத்தில் அனைவரிடமும் அன்பு காட்டுவீர்கள். பிறரது அந்தரங்க காரியங்களில் தலையிடக் கூடாது.

துலாம்: நல்லதொரு நாள். ஆனாலும் ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். நண்பர்களை நம்பி எந்த வேலையும் செய்ய வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செய்ய வேண்டும். நரசிம்மரை வழிபட வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தன லாபம் உண்டு. பேச்சில் இனிமை இருக்கும். பெண்களுக்கு சுபகாரிய செய்திகள் கூடி வரும். மிக உயர்வான வெற்றிகரமான ஒரு நாளாக இந்த நாள் அமையும்.

சிம்மம்: நல்ல தன லாபம், காரிய வெற்றி, பேச்சு, எழுத்தக்களினால் புகழ் பெறக் கூடிய சூழல் உருவாகும். எல்லோரும் உங்களை போற்றுவார்கள். நீங்கள் செய்யும் காரியங்கள் பிறருக்கு சாதகமாக முடியும்.

கடகம்: எங்கும், எதிலும் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இருக்கும் தடைகள் விலகும். வியாபாரிகளுக்கு கூடுதல் நன்மை உண்டு. பெண்கள், குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மிதுனம்: நன்மைகள் அதிகளவில் நடைபெறும். மகாலட்சுமி விரதம் நிறைந்த இந்த நாளில் கண்டிப்பாக மகாலட்சுமி விரதம் இருக்க வேண்டும். பதற்றம் இருக்கும்.

ரிஷபம்: மகிழ்ச்சியான நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் வெற்றிகரமான நாள்.

மேஷம்: எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்திற்கு வாடிக்கையாளர்கள் அமைவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

https://www.youtube.com/watch?v=Gen58n14Tq0