மனிதரை மனிதர் மதித்தால் உயர்வு உண்டு!

95

மனிதரை மனிதர் மதித்தால் உயர்வு உண்டு!

அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியான இன்றைய (01-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 01 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: அதிர்ஷ்டமான நேரம். பிள்ளைகளால் நன்மை உண்டு. குல தெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு. எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். தகவல் தொடர்பு விஷயங்களில் வேலை கிடைக்கும். கல்வி நிலை உயரும். வியாபாரம் சிறக்கும்.

கும்பம்: முருகப் பெருமானை வழிபட வேண்டும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டு. உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உறவு விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மகரம்: மன உறுதி வெல்லும். வேலை வாய்ப்பு அமையும். பகைவர்களை வெல்வீர்கள். தன லாபம் கூடும்.

தனுசு: குழந்தை வரம் கிடைக்கும் அற்புதமான நாள். கண், காது, மூக்கு, தொண்டை பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உண்டு. திருமண வரன் கூடி வரும் நாள். சமூக பணிகளால் பெயர் பெறுவீர்கள். தான, தர்மம் செய்ய வேண்டும்.

விருச்சிகம்: விரும்பியவரை கைபிடிக்க காரியங்கள் கூடி வரும். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சனைகள் விலகும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ உதவி எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை நிலை உயரும்.

துலாம்: நல்ல பொருள் வரவு உண்டு. வேலை வாய்ப்பு அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கல்வி நிலை உயரும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: நல்லதொரு நாள். அதிர்ஷ்டம் தேடி வரும். தொட்ட காரியங்கள் துலங்கும். வியாபாரிகள் முன்னேற்றம் பெரும் நாள். கடன் விலகும் நாள். அடிவயிறு தொடர்பான பிரச்சனை வரும்.

சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும் அற்புதமான நாள். பிள்ளை வரம் வேண்டி கோயில் கோயிலாக ஏறி இறங்கியவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்றால் வெற்றி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலை உயரும்.

கடகம்: எலக்ட்ரானிக் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் நல்ல நாள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைதுணை உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தன லாபம் பெருகும்.

மிதுனம்: தெய்வத்தை வழிபட வேண்டிய நாள். தன வரவு, குடும்பத்தில் நிம்மதி எல்லாம் உண்டாகும். கடன் பாக்கிகள் வசூலாகும். யாரையும் விமர்சிக்கவோ, கேளி, கிண்டல் செய்யவோ கூடாது.

ரிஷபம்: கால் பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களை மட்டமாக நினைக்க கூடாது. மனிதரை மனிதர் மதித்து வாழ வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. தன லாபம் உண்டு.

மேஷம்: புதிதாக வேலை தேடுபவர்களுக்கு ஏற்ற நாள். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். கணவன் – மனைவி உறவில் மட்டும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். வண்டி, வாகனங்களை பழுது நீக்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றிகரமான நாள்.