மன சஞ்சலம், மன பயம் இருக்கும்!

85

மன சஞ்சலம், மன பயம் இருக்கும்!

அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியான இன்றைய (06-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 06 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். பெருமாள் வழிபாடு முயற்சி அளிக்கும். சுய பாதுகாப்பில் அக்கறை வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

கும்பம்: காது, மூக்கு, தொண்டை பிரச்சனை இருக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். சொத்து வாங்கும் யோகம் உண்டு. வில்லங்க சான்று சரிபார்த்து வாங்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு லாபம் பெருகும்.

மகரம்: முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள். இன்று கண்டிப்பான முறையில் பித்ரு வழிபாடு மேற்கொள்ள வேண்டும். அனுபவத்தால் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பங்குதாரர்களால் ஏமாற்றம் அடைவீர்கள்.

தனுசு: அபூர்வமான வெற்றிகளை தாங்கி வரும் ஒரு நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வம்பு, வழக்குகளிலிருந்து ஒதுங்கி செல்ல வேண்டும். தன லாபம் உண்டு.

விருச்சிகம்: மூத்த பெண்களால் வாழ்க்கையில் நன்மைகள் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் வரும். விளம்பர துறையை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் விலகும். எழுத்தாளர்கள் புகழ் பெறுவார்கள்.

துலாம்: வாராஹி அம்மனை வழிபட வேண்டும். துன்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். தன லாபம் உண்டு. சொத்து, சுக விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தன லாபம் உண்டு. பிள்ளைகள் வளர்ப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மன சஞ்சலம், மன பயம் இருக்கும். துர்க்கை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். அரசியல் ஆதாயம் உண்டு. செல்வாக்கு பெருகும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சிம்மம்: குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் கற்றுத் தர வேண்டும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் உங்களை வளர்க்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும் நாள். போதைப் பொருள் தொடர்பு உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும். உடல் நலத்தை பாதிக்கும். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும்.

கடகம்: கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சலசலப்புகள் உண்டாகும். தன லாபம் உண்டு. கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரம் வசியமாகும்.

மிதுனம்: நன்மைகள் ஏராளம் நடைபெறும் நல்லதொரு நாள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. புதிய வேலை வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள்.

ரிஷபம்: கேட்டது கிடைக்கும் நாள். தன லாபம் உண்டு. மன நிம்மதி உண்டாகும். மூதாதையர்களின் சொத்துக்கள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல், பிரச்சனை தீரும்.

மேஷம்: இந்த நாளில் புகழ் பெறக் கூடிய ஆற்றல் வெளிப்படும். முயற்சிகள் வெற்றி பெறும். சிறு பூச்சிகளால் தொல்லை இருக்கலாம். தன லாபம் கூடும். https://www.youtube.com/watch?v=0ZsZSRwJM9k