மருத்துவத்தால் உடல் நலம் சீராகும், யோகா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!

44

மருத்துவத்தால் உடல் நலம் சீராகும், யோகா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!

ஜூன் 27 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (27-06-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: ஏராளமான நன்மைகள் உண்டாகும் அற்புதமான நாள். வாழ்க்கையில் வருமானம் பெருகும். உடல் நலன் நன்றாக இருக்கும். முதுகு வலி வரும். நெஞ்சு வலி இருக்குமோ என்று பயம் வரும். சந்திர பகவானை வழிபட எந்த நோயும் வராது. பேச்சில் கவர்ச்சி உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

ரிஷபம்: எதிரிகளை கண்டுபிடிப்பீர்கள். புதிய வேலைமாற்றம் உண்டாகும் சூழல் அமையும். பொருளாதார வளர்ச்சி உண்டு. காதல் உணர்வு உண்டாகும். காதலை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும்.

மிதுனம்: மிக அருமையான நாள். மீடியாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றமான நாள். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார ரீதியாக வளர்ச்சி இருக்கும். சில நெருக்கடிகள் இருக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். முதலீடு அளவாக இருக்க வேண்டும்.

கடகம்: மிக அருமையான நாள். ஏராளமான நன்மைகள் நடக்கும். அறிவு மேதைகள் உருவாகும் நாள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். டபுள் புரமோஷன் கிடைக்கும். பணம் வரும் வழியை வெளியில் சொல்லக் கூடாது. தந்தையின் உடல் நலனில் அக்கறை தேவை.

சிம்மம்: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். மேன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சந்தொஷம் நிலவும். அழகான புரமோஷன் கிடைக்கும். குழந்தையை தத்தெடுக்கும் யோகம் உண்டு.

கன்னி: பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும். வாழ்க்கையை புரட்டிப் போடும் யோகம் உண்டு. வெளிநாட்டு யோகம் உண்டு. உடலில் உள்ள காயங்கள் குணமாகும். வீட்டு சமையலறையை அழகாக மாற்றும் அமைப்பு உண்டு.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: வாழ்க்கை துணையை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். காதல் வயப்படும் நாள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தேவையான கடனுதவி கிடைக்கும். நல்ல வேலைவாய்ப்பு அமையும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில் அமையும். திருமண பந்தம் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்கும்.

விருச்சிகம்: மிக அருமையான நாள். பிள்ளைகளுக்கு அற்புதமான நேரம். நல்ல பதவி, பட்டம் அமையும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். உங்களை விரும்பக் கூடியவர்கள் இருப்பார்கள். வியாபாரத்தில் அனுகூலமான ஒரு நாள்.

தனுசு: அனுகூலமான நன்மை உண்டாகும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் கூடி வரும். மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். யோகா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டு வாய்ப்பு உண்டு. அற்புதமான நேரம்.

மகரம்: இந்த நாள் இனிய நாள். அன்பை வெளிப்படுத்தும் நாள். வாழ்க்கை துணையாக வருபவர்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு அன்பைக் காட்டி வளர்க்க வேண்டும். அன்பு காட்ட வேண்டும்.

கும்பம்: இந்நாள் நன்னாள். தேவையான கடனுதவி கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனச்சங்கடம் இருக்கும். வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். கல்வி முயற்சி வெற்றி பெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் வரும் பிரச்சனை சரியாகும்.

மீனம்: பண வருமானம் நன்றாக இருக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். வாகன யோகம் கூடி வரும். மனைவியால் அனுகூலம் உண்டு. எல்லா வகையிலும் வெற்றிகரமான நாள்.