மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள்!

80

மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள்!

அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியான இன்றைய (03-10-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (அக்டோபர் 03 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்லதொரு நாள். வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். கால்களில் அடிபடக் கூடும். அனுகூலமான நாள்.

கும்பம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும்.

மகரம்: மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். மன பயம் உள்ளவர்கள் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். வியாபாரம் நன்றாக இருக்கும். பேச்சாளர்கள் புகழ் பெறுவார்கள். அப்பா – அம்மா பிரச்ச்சனை சரியாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு: அதிர்ஷ்டகரமான ஒரு நாள். எதிர்பார்க்கும் நல்ல செய்திகள், அனுகூலங்கள் தேடி வரும். பல்வேறு தொந்தரவுகள் விலகும். தன லாபம் உண்டு. வாய்வு பிரச்சனைகள் வரும்.

விருச்சிகம்: பிறருக்கு தொண்டு செய்தால் அனைத்து நன்மைகளும் உண்டு. தன லாபம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரம் செழிக்கும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

துலாம்: மன மகிழ்ச்சியான ஒரு நாள். எண்ணிய காரியங்கள் ஈடேறும். குடும்பத்தில் அமைதி பெருகும். உடல் நலனில் அக்கறை வேண்டும். நண்பர்களால் நன்மை உண்டு. தோல் தொடர்பான பிரச்சனை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: இனிய நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். இடமாற்றம் உண்டு. பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வீர்கள்.

சிம்மம்: பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். அளவான நன்மைகள் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தன வரவு பெருகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரும். வியாபாரத்திற்கு புதிய வழிமுறைகள் கிடைக்கும். பல் வலி உபாதைகள் ஏற்படலாம்.

மிதுனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நல்லதொரு நாள். மன தைரியம் பெருகும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. மார்பக நோய் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மனதில் தைரியம் பிறக்கும். சுப போகங்கள் பெருகும் நாள். கடன் உதவி கிடைக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம் நன்றாகவே நடக்கும். தன வரவு பெருகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரும்.