மாடி வீடு கட்ட கடனுதவி கிடைக்கும், 2ஆவது திருமணம் கை கூடி வரும்!

53

மாடி வீடு கட்ட கடனுதவி கிடைக்கும், 2ஆவது திருமணம் கை கூடி வரும்!

மே 26 ஆம் தேதியான இன்றைய (26-05-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: அருமையான நாள். வியாபாரிகளுக்கு தொட்ட காரியங்கள் துலங்கும். நல்ல வரன் அமையும். இளம் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசு வழியில் வருமானம் வரும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் உண்டு.

ரிஷபம்: மிகச்சிறந்த யோகமான நாள். கல்யாண தடை நீங்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனை சரியாகும். வேலை நெருக்கடி இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது.

மிதுனம்: அருமையான நாள். பிஸினஸ்க்கு நல்லது. கல்வி முயற்சி வெற்றி பெறும். நல்ல நோக்கங்கள் நிறைவேறும். மிகச்சிறந்த வெற்றி வரும். 2ஆவது திருமண யோகம் உண்டு. ஏராளமான நன்மைகள் உண்டு.

கடகம்: மிக மிக அருமையான நாள். வாழ்க்கையில் உயரக் கூடிய நாள். உயர்படிப்புக்கு முயற்சித்தால் வெற்றி உண்டு. தான, தர்மம் செய்ய வேண்டும். தந்தை வழியில் சொத்துக்கள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். முக அழகு கூடும்.

சிம்மம்: தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. சகோதர உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டு. கெமிஸ்டரி படித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை.

கன்னி: திருமணம் கை கூடி வரும். காம உணர்வுகள் அதிகமாக இருக்கும். சிறு தூர பயணங்களால் வெற்றி உண்டு. உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: உடல்நிலையில் கூடுதல் அக்கறை தேவை. கண்கள் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் மெடிக்கல் அட்வைஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். முதல் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்வீர்கள். புதிய உறவுகள் அரும்பும் ஒரு காலகட்டம் இது.

விருச்சிகம்: நன்மைகள் அதிகம் நடக்கும் மகிழ்ச்சிக்குரிய நாள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டும். பொன்னான ஒரு நாள். பதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள்.

தனுசு: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பல நன்மைகள் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. அரசு வேலை கூடி வரும். மாடி வீடு கட்ட கடனுதவி கிடைக்கும்.

மகரம்: முன்னேற்றங்கள் தேடி வரக் கூடிய நாள். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். குடும்ப நன்மை கருதி எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். தந்தை வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம்: தன செழிப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான நாள். வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்: இந்நாள் பொன்னாள். யோகமான நாள். அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு நாள். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம் உண்டு. வேலை வாய்ப்பு உண்டு. திருமணம் கை கூடி வரும்.