மாத்தி யோசித்தால் வெற்றி நிச்சயம்!

163

மாத்தி யோசித்தால் வெற்றி நிச்சயம்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசி பலன்கள் பற்றி பார்ப்போம்….

மேஷ ராசி அன்பர்களே, வாழ்க்கையில் உயரும் வரை காதை மூடிக் கொள்ள வேண்டும். உயர்ந்த பிறகு வாயை மூடிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம். அப்படியிருந்தால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இந்த உலகம் உங்களை தூண்டி விடும். உங்களை கோபப்படுத்தும். அதனால், அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளிவிடுவீர்கள். இது உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடும்…உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். தூண்டி விடுபவர்களிடமிருந்து சற்று விலகியிருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்றுத் தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் சற்று குறைபாடு இருக்கும். அதிர்ஷ்ட எண் 1, நிறம்: மஞ்சள்.

ரிஷப ராசி அன்பர்களே: உங்களது முயற்சி மாறுபட்ட கோணத்தில் இருக்கும். எதையும் மாற்றி யோசிக்க வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கென்று தனி சிந்தனை இருக்க வேண்டும். வியாபாரத்தில் மாற்றி யோசித்தால் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். வேலை, குடும்பம், கல்வி ஆகியவற்றில் மாற்றி யோசித்தால் வெற்றி பெறலாம். தாயாரின் உடல் நிலையில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட எண் 5, வண்ணம் வாக்கு வண்ணம்..

மிதுன ராசி அன்பர்களே: ஒரு சாகசம் நிறைந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். சந்தன மேடை சாகச வாடை அப்படி என்றால் அது மிதுன ராசிக்காரார்களுக்கு பொருந்தும். மன தைரியம் அதிகமாக இருக்கிறது. தன லாபம் அதிகரிக்கும். நிறைய சாதனைகள் புரியும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.

முழுவதும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனின் முழு தொகுப்பு வீடியோ!