மாற்றத்தை உண்டாக்கித் தரும்: ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

178

மாற்றத்தை உண்டாக்கித் தரும்: ரிஷபம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 2021 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்…

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக பலன் உண்டு. குரு பார்க்க கோடி நன்மை உண்டு என்று சொல்வார்கள். வேலை, தொழில், குடும்பம் என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பல அற்புதங்களை நிகழ்த்த இருக்கிறது. அந்த வகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 13 ஆம் தேதியான இன்று மாலை மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, நவம்பர் 20 ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன் ரிஷபம் ராசி – வீடியோ தொகுப்பு!

ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன் 2021 – 2022….

மகத்தான மாற்றங்களை கொண்டு வந்து தரும் வகையில் இந்த குரு பெயர்ச்சி அமைகிறது. ரிஷப ராசிக்கு பாதக ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். 9 ஆம் இட த்தில் சனி பகவான அமர்ந்திருப்பதால் கடந்த 2 ஆண்டுகள் நீங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். வீட்டில் பெற்ற பிள்ளைகளே நம்மை புரிந்து கொள்ளவில்லை. அலுவலகத்திலும் பிரச்சனை. சரியான வேலை கிடைக்கவில்லை. இன்னும் செட்டிலாகவில்லை. திருமணமும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு கை கொடுக்க குரு பகவான் வருகிறார். https://www.youtube.com/watch?v=s5UEHt1JsuU

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் லாபாதிபதி. ஒரு புறம் அஷ்டமாதிபதி, மறுபுறம் லாபாதிபதி. இந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 10ஆவது ஸ்தானத்திற்கு வருகிறார். 10ஆம் இட த்தில் குரு பகவான் இருந்தால் பதவியில் ஒரு மாற்றத்தை உருவாக்கித் தருவார். பொருந்தாத இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிந்த உங்களுக்கு நீங்கள் தேடிய வேலை கிடைக்கும். வேலையிலிருந்து மாற்றம் உண்டாகும். இதன் மூலம் அடுக்கடுக்கான முயற்சிகள் வரும். ஆனால், அந்த வேலையை ஏற்றுக் கொள்ளலாமா என்ற ஒரு குழப்பம் இருக்கும். https://www.youtube.com/watch?v=s5UEHt1JsuU

உங்களது ஜாதகத்தைப் பார்த்து வரும் வேலையை ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குரு பகவான் தன ஸ்தானத்தைப் பார்க்கப் போகிறார். சொத்து, சுகம் சேரும். இதன் மூலம் திருமணமும் நடக்கும். கல்வியில் இருக்கும் தடைகள் எல்லாம் விலகும். உடல் நல பிரச்சனைகள் எல்லாம் சீராகும். முகப் பொழிவு ஏற்படும். அழகு கூடும். கார் வாங்கும் யோகம் உண்டாகும்.

நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் தீரும். வியாபாரிகளுக்கு கடனுதவி கிடைத்து வியாபாரத்தில் லாபம் கூடும். எதிரிகளின் தொந்தரவு நீங்கும். உடலில் இருந்த வியாதிகள் எல்லாம் காணாமல் போகும். இந்த குரு பெயர்ச்சி நல்ல மன வலிமையைத் தரும். நல்ல உடல் நலத்தைத் தருகிறது. நல்ல வாகன யோகத்தைத் தருகிறது. நல்ல கல்வியை பெற்றுத் தருகிறது. நல்ல குடும்ப வாழ்க்கையை பெற்றுத் தருகிறது. நல்ல திருமண வாழ்க்கையை தருகிறது.