மாலையில் மௌனமாக இருந்தால் ஜம்முன்னு இருக்கும்!

77

மாலையில் மௌனமாக இருந்தால் ஜம்முன்னு இருக்கும்!

செப்டம்பர் 08 ஆம் தேதியான இன்றைய (08-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 08 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: நிறைந்த நன்மைகள் பெறக்கூடிய நாள். போட்டி, பந்தயங்களை சமாளிக்க வேண்டிய நாள். வியாபாரிகளுக்கு ஒரு நல்ல நாள். கடனுதவி கிடைக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கும்பம்: காலை கனிவான நாள். மாலையில் மௌனமாக இருக்க வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களை காலையில் முடித்துக் கொள்ள வேண்டும். கணவன் – மனைவி உறவில் கனிவான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். தன லாபம் உண்டு. நீங்கள் செய்யும் காரியங்கள் பிறருக்கு நல்லதாக முடியும்.

மகரம்: மாலை நேரம் மகிழ்ச்சியான நேரம். காலை நேரத்தில் புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தனுசு: அற்புதமான வெற்றிகளை தரக்கூடிய நாள். வேலை வாய்ப்பு அமையும். பெண்களுக்கு வெற்றிகள் வந்து சேரும். எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தன லாபம் வந்து சேரும்.

விருச்சிகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் பெருகும். மிகப்பெரிய வெற்றிகள் தேடி வரும். விசாகம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும். யாரையும் விமர்சிக்க கூடாது.

துலாம்: வேலை மாற்றம் உண்டாகும். xபெரியவர்களுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் தென்படும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி உண்டு. சகல விஷயங்களிலும் நன்மை அதிகரிக்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மிருக உணர்வுகள் அதிகரிக்கும். கட்டுப்பாடு தேவை. அடிவயிறு பிரச்சனை இருக்கும். கோபத்தை தவிர்த்தால் வெற்றி உண்டு.

சிம்மம்: மும்முனை தாக்கம் ஏற்படும். குருவின் ஆசியினால், வியூகம் அமைத்து வெளிவருவீர்கள். வியாபாரத்தில் தன லாபம் உண்டு. தாம்பத்திய வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது.

கடகம்: கடவுள் காட்சி கொடுப்பார். தர்மம் செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் சாமர்த்தியத்தினால் வெற்றி கிடைக்கும். சகல துறைகளிலும் வெற்றி வரும்.

மிதுனம்: மனோ தைரியம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். புதிதாக வீடு கட்டும் யோகம் வரும். வேலை வாய்ப்பு அமையும். இதயம் தொடர்பான பிரச்சனைகள் வந்து செல்லும். வெற்றிகள் தேடி வரும்.

ரிஷபம்: எடுத்த முயற்சிகளில் வெற்றி வரும். இறைவனின் கருணை கிடைக்கும். பொருள், தான்ய விருத்தி உண்டாக அன்னபூரணி வழிபாடு செய்ய வேண்டும். வம்பு, வழக்குகளில் சிக்க கூடாது.

மேஷம்: தொழில், வேலை முயற்சிகள் வெற்றி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விளையாட்டு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும்.

https://www.youtube.com/watch?v=KHmWbZUgHpg