மிதுனம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

129

மிதுனம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கணித்த 12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலனை கணித்துள்ளார். இந்தப் பதிவில் நாம் மிதுனம் ராசிக்கான தமிழ் மாதமான கார்த்திகை மாத ராசி பலனை பார்ப்போம்….

மிதுனம்:

எல்லோரையும் தனது நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் திறமை பெற்றிருப்பார்கள். மாத முன்பகுதியில் நன்மைகள் இருந்தாலும், பிற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பொருளாதார நிலை உங்களது தேவைக்கு ஏற்ப உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

மிதுனம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன் வீடியோ தொகுப்பு!

புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். அவர்கள் நண்பர்களாவார்கள். அவர்களால் ஆதாயமான பலன்கள் உண்டு. உடன் பிறப்புகளாலும் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் தொய்வு ஏற்பட்டு சரியாகும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து சரியாகும். வீடு, வாகனத்தை சரிபடுத்த செலவினங்கள் ஆகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. காதல் விஷயங்கள் வெற்றி பெறும்.

எதிரிகள் விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  கணவன் மனைவிக்கிடையில் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்த்ஹில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரம் ரீதியிலான புதிய ஒப்பந்தங்கள் மிகப் பெரிய நன்மைகளை தரும்.  வாகன பயணங்களில் கவனம் தேவை. தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உங்களது உயர்வுக்கு தந்தை உறுதுணையாக இருப்பார்.

கௌரவம், புகழ், அந்தஸ்து பெருகும்: மிதுனம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழில், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வு தேடி வரும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக மாறுவார்கள். உங்களது திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் உருவாகும். புதிய மாற்றங்கள் ஏற்படும் ஒரு மாதமாக இந்த கார்த்திகை மாதம் அமையும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 7, 8 மற்றும் 9.

பரிகாரம்: திருவாரூர் அருகிலுள்ள திருக்கண்ணங்குடி லோகநாத பெருமாளை புதன் கிழமையில் சென்று வழிபடலாம்.