மிதுனம் ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்!

243
மிதுனம் ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் 12 ராசிகளுக்கான புரட்டாசி மாத ராசி பலன்கள் 2021…

மிதுன ராசிக்கான புரட்டாசி மாத ராசி பலன்…

திருப்புமுனை நிறைந்த மாதம். பொருளாதார வரவு மேம்படும். கௌரவம், புகழ், அந்தஸ்து, தன்னம்பிக்கை, செல்வம், செல்வாக்கு பெருகக்கூடிய ஒரு அமைப்பு. பண வருவாய் திருப்திகரமாக இருக்கும். பொருள் வருவாய், தன வருவாய் சிறப்பாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக செய்யலாம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.

கணவன் – மனைவி உறவு நிலை மேலோங்கும். சொல்லுக்கும், செயலுக்கும் மதிப்பும், மரியாதையும் கூடும். வாக்கு, வாக்கு சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு உற்சாகம் நிறைந்த மாதம். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். தூர தேசத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

மேலும் படிக்க: மிதுனம் ராசி புரட்டாசி மாத ராசி பலன் 2021 – வீடியோ தொகுப்பு!

பிபிஓ, ஐடி நிறுவனம், தபால் துறை, கொரியர் சர்வீஸ், விளையாட்டு வீரர்கள், நடனக் கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், சினிமா மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் என்று அனைவருக்கும் நல்ல வேலை வாய்ப்பு அமைந்து, வருமானம் அதிகரித்து சந்தோஷமாக இருப்பார்கள்.

பத்திரிக்கைத் துறை, மீடியாத் துறை, எழுத்துத் துறை, பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள், இலக்கியவாதிகள், ஆடிட்டர்கள், வங்கி பணியார்கள், ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் உற்சாகம் நிறைந்த ஒரு காலகட்டம். கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் நன்றாக படிப்பார்கள். வீடு இல்லாதவர்கள் வீடு, இடம், நிலம், பிளாட் என்று வாங்கலாம். வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டு. தாயாரின் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். புத்திரர், புத்திரிகளால் மேன்மை அடையும் ஒரு நிலை. குல தெய்வத்தின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். சினிமா, தொலைக்காட்சியில் பணியாற்றும் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் என்று அத்தனை பேருக்கும் நல்லது நடக்கும் ஒரு காலகட்டம். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்து கை நிறைய சம்பாத்தியம் பெற்று சந்தோஷமாக வாழக்கூடிய ஒரு அமைப்பு.

பிள்ளைகளை அனுசரித்து செல்ல வேண்டும். கடன் இருந்தால் அடைந்துவிடும். கடன் இல்லாமல் இருந்தால், சிறிதளவு கடன் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். எதிரிகள் ஓடி ஒழிவார்கள். வாழ்க்கைத் துணை அல்லது மனைவியால் யோக பாக்கியங்கள் கிடைக்க கூடிய ஒரு காலகட்டம். பிறந்த வீட்டிலிருந்து பணமோ, நகையோ கொண்டு வரக் கூடிய ஒரு அமைப்பு இருக்கிறது.

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பத்திரிக்கைத் துறை, எழுத்துத் துறை, மீடியாத் துறையில் வேலக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் சொல்படி நடந்தால் எந்தப் பிரச்சனையும் வராது. கடின உழைப்பு இருக்கும். விட்டுக் கொடுத்து, அனுசரித்து செல்வது நல்லது.

முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு 2ஆவது திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். மூத்த சகோதரர்கள் இருந்தால், அவர்களால் ஆதாயம் உண்டு. எண்ணிய செயல் ஈடேறும். எல்லாம் லாபமாக முடியும். தொட்டதெல்லாம் லாபமாக அமையும். தொடாத காரியங்களில் கூட லாபம் கிடைக்கும். சுபச் செலவுகள் ஏற்படக் கூடிய ஒரு நிலை. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு உற்சாகமான ஒரு காலகட்டம்.

உள்நாட்டு வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் அன்பர்களுக்கு சந்தோஷமான காலகட்டம். மிதுன ராசி அன்பர்களுக்கு புரட்டாசி மாதம் 1ஆம் தேதி, 2ஆம் தேதி, 28, 29 மற்றும் 30 ஆகிய 5 நாட்கள் சந்திராஷ்டமம். அதனால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லாதீர்கள். இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெருமாளை போற்றி, சக்கரத்தாழ்வாரை வணங்கி வழிபட வேண்டும்.