மிதுனம் ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

25

மிதுனம் ராசி ஐப்பசி மாத ராசி பலன்!

ஜோதிட சிரோன்மணி சைதை ராஜாவின் தமிழ் மாத ராசி பலன் 2021

சைதை ராஜாவின் மிதுனம் ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன் 2021

ஐப்பசி மாத ராசி பலன் மிதுனம் 2021….

ஒரு பொற்காலமான மாதம். பத்திரிக்கைத் துறை, எழுத்துத் துறை, மீடியாத் துறை, வங்கி பணியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள் ஆகியோருக்கு உயர்வான ஒரு காலகட்டம். பேர், புகழ், அந்தஸ்து கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். பல வகைகளிலிருந்து பணம் வந்து சேரும். https://www.youtube.com/watch?v=tdZHwcW7B5U&t=6486s

பொருளாதார மேன்மை, குடும்ப மேன்மை, பண வருவாய், பொருள் வருவாய் என்று எல்லாமே திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நட த்துவார்கள். கணவன் மனைவி உறவு மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள், வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் என்று அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மிகவும் நன்றாக படிப்பார்கள்.

வாக்கு, வாக்கு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் அன்பர்களுக்கு உன்னதமான, உற்சாகமான ஒரு அமைப்பு. வங்கி சேமிப்பு அதிகரிக்கும். அதிக முயற்சி எடுத்து எந்த காரியம் செய்தாலும் வெற்றி உண்டு. தாயாரது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய் வழி உறவுகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.

முழுவதும் தெரிந்து கொள்ள: மிதுனம் ராசி ஐப்பசி மாத ராசி பலன் வீடியோ தொகுப்பு!