மீடியா துறையில் உயர்வு ஏற்படும்: சிம்மம் செப்டம்பர் மாத ராசி பலன்!

94

மீடியா துறையில் உயர்வு ஏற்படும்: சிம்மம் செப்டம்பர் மாத ராசி பலன்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் செப்டம்பர் மாத ராசி பலன்கள்…

சிம்மம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன் 2021…

சிம்ம ராசி அன்பர்களே…

எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணம் வருவதற்கு வழி கிடக்கும். பிள்ளைகளால் மன வருத்தங்கள் இருக்கும். பிள்ளைகளுக்கு முன்னேற்றமான காலகட்டம். இருந்தாலும், உங்களது வாழ்க்கையில் பிள்ளைகளால் மன வருத்தம் இருக்கும். சில குடும்பத்தில் பிரிவினைகள் நிகழக் கூடிய காலம். இதெல்லாம் இன்னும் சில காலங்களில் மாறிவிடும். சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்த பயமும் வேண்டாம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் சிம்மம் ராசிக்கான செப்டம்பர் மாத ராசி பலன்– வீடியோ தொகுப்பு

தற்காலிக பிரச்சனை தான். நாம் கீழே விழுந்தால் நம்மை பார்த்து சிரிப்பதற்கு ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…என்று எண்ணி நீங்கள் வருவீர்கள். வாழ்க்கையில் நான் விழவே மாட்டேன். உடன் பழகக் கூடியவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

யாரை நம்பி இருந்தீர்களோ அவர்களால் பிரச்சனை வரும். யாரிடமும் வாழ்க்கை ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடல் நலக் கோளாறு இருந்து கொண்டு இருக்கும். எதிரிகளை அடையாளம் காட்டுவார். எதிரிகளைக் கண்டு பயப்பட தேவையில்லை. நல்ல வேலை அமையும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் புதிய உச்சத்தை தொடும் மாதமாக இந்த மாதம் இருக்கும்.

வியாபாரம் நடக்கும். ஆனால், பணம் கொடுக்கல், வாங்களில் பிரச்சனை இருக்கும். குடும்ப பெண்களுக்கு உயர்வான நேரம். அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கு நல்ல காலகட்டம். பெண் தெய்வ வழிபாடு மிகச் சிறந்த வெற்றியை கொடுக்கும். சிம்ம ராசிக்காரர்கள் அன்னை புவனேஸ்வரியை வழிபட வேண்டும். அபிராமி அம்மனை வழிபட வேண்டும். எல்லா நன்மைகளும் கூடி வரும்.

இந்த மாதம் செயற்கரிய காரியங்களை பலரும் செய்வீர்கள். பேச்சில் ஒரு பரபரப்பு இருக்கும். பக்குவசாலியாக நடப்பீர்கள். அனுபவம் உங்களை பக்குவப்படுத்தியிருக்கிறது. எதையும் பலமுறை யோசித்து செயல்படுவீர்கள். அந்த அனுபவம் உங்களை காப்பாற்றும். என்ன பிரச்சனை வந்தாலும் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் சில சிக்கல்கள் இருக்கிறது.

உங்களால் உங்களது மனைவிக்கு பணிச்சுமை கொஞ்சம் அதிகமாகும். மனைவியால் சில மருத்துவச் செலவுகள் வரும். அக்கம் பக்கத்தினரிடையே இருந்த பிரச்சனை அகலும். மீடியா துறையை சேர்ந்தவர்களுக்கு உயர்வு வந்து சேரும். கம்பியூட்டர் துறையில் வேலையிழந்த பலருக்கும் வேலை வாய்ப்பு கூடி வரும். ஒட்டு மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏராளமான நன்மைகள் நடக்கும்.