மீனம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

123

மீனம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன்!

விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கணித்த 12 ராசிகளுக்கான கார்த்திகை மாத ராசி பலனை கணித்துள்ளார். இந்தப் பதிவில் நாம் மீனம் ராசிக்கான தமிழ் மாதமான கார்த்திகை மாத ராசி பலனை பார்ப்போம்….

மீனம்:

பொதுவாகவே மீனம் ராசிக்காரர்கள் எப்போதும் தன்னை சார்ந்தவர்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்க கூடியவர்களாக இருப்பார்கள். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொருளாதாரம் உங்களது தேவைக்கு ஏற்ப உயரும். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

உடன் பிறப்புகளால் மனக்கசப்புகள் ஏற்படும். இருந்தாலும் அவர்களால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். தாயின் உடல்நிலை ஆரோக்கியம் பெறும். தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம் தொடர்பான வசதிகளை நீங்கள் மேம்படுத்துவீர்கள்.

வெளிநாட்டுக்கு செல்வீர்கள்: மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்!

இந்த காலகட்டத்தில் மன அமைதி அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகளால் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பங்கு வர்த்தகத்தின் மூலமாக லாபம் உண்டாகும். குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அனுக்கிரகம் உண்டு. காதல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

மீனம் ராசிக்கான கார்த்திகை மாத ராசி பலன் வீடியோ தொகுப்பு!

கணவன் மனைவிக்கிடையில் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு. தந்தையின் உடல் நலனில் கவனம் வேண்டும். தந்தையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து சரியாகும். தொழில், உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் தற்போது கிடைக்கும்.

தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பாக வெளியூர், வெளிநாடு செல்ல நேரிடும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சில நேரங்களில் மறைமுக எதிர்ப்புகள் வரும். எதிலும் நிதானமாகவும், பொறுமையாகவும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். நண்பர்களால் ஆதாயமான பலன் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 01, 02 மற்றும் 03.

பரிகாரம்: சேலம் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரரை வியாழக் கிழமையில் சென்று வழிபடலாம்.